செக்கச்சிவந்த வானம்: அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா!

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார்.  

Last Updated : Mar 22, 2018, 06:57 PM IST
செக்கச்சிவந்த வானம்: அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா! title=

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்தப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புராடக் ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது.

மணி ரத்னத்தின் இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஏறும் வரவேற்ப்பு பெற்றது. தமிழில் செக்க சிவந்த வானம் என்றும், தெலுங்கில் நவாப் என்றும் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

மேலும் செக்க சிவந்த வானம் திரைப்படமானது கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைக் களம் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தில் சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும் நடிக்கவுள்ளதாக செய்தி கசிந்துள்ளது.

இதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 14 இப்பாட்டின்  படப்பிடிப்பு துவங்கியது.தற்போது வேலை நிறுத்தம் காரணமாகநிறுத்தப்பட்டு உள்ளது.இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்க உள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில முக்கிய கதாபாதிரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா,இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று  செய்தி கசிந்துள்ளது.

ஜோதிகாவை பொறுத்தவரை திருமணத்திற்குபிறகு சிலஆண்டுகள் இடைவெளி விட்டாலும், மீண்டும் நல்லநல்லகதைகளை மையமாக வைத்து நடித்து வருகிறார்ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News