அடுத்த வருட IPL போட்டி எங்க நடக்குதுன்னு தெரியுமா?..

இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கெட் நீங்க இந்தியாவில் பார்க்கலாம். ஆனா, அடுத்தவருடம் துபாய் போகணும்!

Last Updated : Apr 26, 2018, 03:33 PM IST
அடுத்த வருட IPL  போட்டி எங்க நடக்குதுன்னு தெரியுமா?.. title=

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் கடந்த 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, ஐ.பி.எல்-ன் 12-வது சீசன் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை பெரும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருதி 12-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும்  ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருந்தார். கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கவுதம் கம்பீர், நடப்பு சீசனில் சற்று தடுமாறுகிறார்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

டெல்லி டேர்வில்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்....! 

Trending News