காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் நடத்தி வரும் போராட்டத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மவுன விரதம் இருந்தனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் விஷால், சூர்யா, கார்த்தி, சிவகுமார், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பொன்வண்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களும், ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
இப்போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது.தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்..!
இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் பகல் 11 மணியளவில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதனால் இந்த அறவழிப்போராட்டம் மேலும் தீவிரமடைந்து. பின்னர், இந்த போராட்டம் இன்று மதியம் 1 மணியளவில் முடிவு பெற்றது.
#WATCH Rajinikanth and Kamal Hassan take part in protest over demand for formation of #CauveryMangementBoard, in Chennai. Music composer Ilayaraja also present. pic.twitter.com/JhIxGxp1QO
— ANI (@ANI) April 8, 2018
இருப்பினும், நடிகர் அஜித் இதுவரை இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.