வீடியோ எடிட் இனி ஈஸி கிரியேட்டர்களே! யூ டியூப் கொண்டு வந்த செயலி

Video Editor APP, Youtube: யூடியூப் கிரியேட்டர்கள் இனி வீடியோவை எளிமையாக எடிட் செய்து யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்ற புதிய செயலி வந்திருக்கிறது. அதன் சேவை இப்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2024, 08:17 PM IST
  • யூடியூப் வீடியோகளை எளிமையாக எடிட் செய்யலாம்
  • கிரியேட்டர்களுக்காக புதிய செயலி அறிமுகம்
  • இனி ஈஸியாக மொபைலிலேயே வீடியோ எடிட் பண்ணலாம்
வீடியோ எடிட் இனி ஈஸி கிரியேட்டர்களே! யூ டியூப் கொண்டு வந்த செயலி title=

யூ டியூப் அறிமுகப்படுத்திய செயலி

கிரியேட்டர்கள் யுகமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டன. இதன் மூலம் இப்போது லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். அந்தவகையில் யூடியூப் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய செயலி, மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது. அந்த செயலியின் பெயர் யூடியூப் கிரியேட். சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

யூடியூப் கிரியேட் ஆப் விரிவாக்கம்

கிரியேட்டர்களை டார்கெட் செய்து கடந்த ஆண்டு இந்த செயலியை யூடியூப் அறிமுகம் செய்தது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் எளிய முறையில் வீடியோக்களை எடிட் செய்யலாம் என யூடியூப் நம்புகிறது. தொழில்முறை வீடியோ எடிட்டிங் பணியில் உள்ள சவால்கள் இதில் பயனர்களுக்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ஒரே ஒரு ரீச்சார்ஜ் செய்தால் மூன்று ஓடிடி இலவசம்! 701 ரூபாய் மட்டுமே

யூடியூப் கிரியேட் ஆப் சிறப்பம்சம்

குறைந்த நேரத்தில் வீடியோக்களை பயனர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மொபைல் போன் வழியே இதில் எடிட் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. ஷார்ட் மற்றும் லாங் ஃபார்ம் வீடியோ என அனைத்தையும் இதில் எடிட் செய்யலாம். இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் வசம் உள்ள வீடியோவை எடிட் செய்யலாம். ஆடியோ ஃபைல்களை சேர்ப்பது, ஃபில்டர் மற்றும் எஃபெக்ட்களை சேர்ப்பது, ஆடியோவில் உள்ள நாய்ஸினை (சப்தம்) அகற்றுவது, அதை தங்களுக்கு வேண்டிய வடிவில் 1080P அல்லது 720P வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். கூடவே யூடியூபிலும் அப்டேட் செய்யவும் முடியும். 

கிரியேட்டர்கள் கவனத்திற்கு

இதுவரை வீடியோ எடிட் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் இனி யூ டியூப் கிரியேட் செயலியை பயன்படுத்த தொடங்குங்கள். உங்களின் தேவைகளை இந்த செயலி மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இனியும் தனியார் செயலிகளை சார்ந்திருக்க தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஜியோ ஸ்கெட்ச் போட்டா மிஸ் ஆகுமா? 12 ஓடிடி, 10ஜிபி டேட்டா 150 ரூபாய் அசத்தல் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News