கைபடாமல் ATMஇல் இருந்து பணம் எடுக்க முடியுமா? முடியும் என்கிறது Intel

கைபடாமல் ATMஇல் இருந்து பணம் எடுக்க முடியுமா? முடியும் என்கிறது Intelஇன் புதிய தொழில்நுட்பம்... இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2021, 11:31 PM IST
  • கைபடாமல் ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
  • இன்னும் சில நாட்களில் இந்த வசதி வந்துவிடும்
  • ஏடிஎம் மோசடிகள் தடுக்க இந்த தொழில்நுட்பம் உதவும்
 கைபடாமல் ATMஇல் இருந்து பணம் எடுக்க முடியுமா? முடியும் என்கிறது Intel title=

புதுடெல்லி: ஏடிஎம் மட்டுமல்ல, எந்த ஸ்மார்ட் சாதனத்தையும் திறக்க கையைப் பயன்படுத்தத் தேவையில்லை. அப்படியொரு தொழில்நுட்பத்தை இன்டெல் (Intel) சமீபத்தில் கண்டுபிடித்தது. நிறுவனம் இதற்கு ரியல்சென்ஸ் ஐடி (RealSense ID) என்று பெயரிட்டுள்ளது. இது ஒரு வகை முக அங்கீகார அமைப்பாக இருக்கும், இது பயனர்களை அடையாளம் கண்டு எந்த ஸ்மார்ட் சாதனத்தையும் (Smart Device) திறக்கும்.

பாதுகாப்பை பலப்படுத்தும்
இந்த சாதனத்தை உருவாக்க ஆழமான சென்சார் (Sensor) பயன்படுத்தப்பட்டுள்ளதாக Intel நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பை மிகவும் வலிமையாக்குகிறது. எனவே ஏடிஎம்கள், கியோஸ்க் (Kiosk) மற்றும் ஸ்மார்ட் லாக்கர்களில் (Smart Lockers) பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சாதனம் பயன்படுத்தப்படலாம். இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இன்டெல் இந்த சாதனத்தை சந்தையில் விற்பனைக்காக களம் இறக்கும் என்று தெரிகிறது.  

இது எவ்வாறு பயனளிக்கிறது?
இந்த இன்டெல் சாதனம் அங்கீகாரம் கொடுக்கும் வழிமுறையை பலப்படுத்துகிறது, இது ஐடி திருட்டைத் தடுக்கிறது. பணம் (Money) மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருட்டுப் போகும் அபாயத்தையும் குறைக்கிறது. இந்த சாதனம் அவ்வப்போது பயனரின் முகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டுபிடிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

Also Read | Google Play Store-ல் போலி CoWIN செயலிகள்... எச்சரிக்கையாக இருங்கள்!!

அதாவது, ஒரு நபரின் முகத்தில் தாடி அல்லது மீசை இருந்தாலும், இந்த நுட்பம் அந்த நபரின் முகத்தை அடையாளம் காணும். இந்த தொழில்நுட்பத்திற்கு வேறு எந்த நெட்வொர்க்கும் தேவையில்லை என்பது முக்கியமான செய்தி. பயனர்களின் முகம் முழுமையாக குறியாக்கம் செய்யப்படும். இன்டெல் (Intel) அறிமுகப்படுத்தும் இந்த சாதனத்தின் விலை ரூ .7,300 மட்டுமே.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News