YouTube Tips: ஒரு டிப்ஸ்... யூடியூப்பில் ஜெட் வேகத்தில் உயரும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை

யூ டியூபில் உங்களுக்கு சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயர வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2022, 06:58 PM IST
  • யூ டியூப்பில் சப்ஸ்கிரைபர் அதிகப்படுத்த
  • புதிய டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
YouTube Tips: ஒரு டிப்ஸ்... யூடியூப்பில் ஜெட் வேகத்தில் உயரும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை title=

Youtube: 4ஜி இணைய வேகம் வந்துவிட்டதால், யூ டியூப் பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. அந்த தளத்தில் வீடியோ மற்றும் ஷார்ட்ஸ் பகிர்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. படைப்பாளர்களுக்கு மிகவும் உகந்த தளமாக மாறியிருக்கும் யூடியூப்பில், திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் கோலோச்சலாம். இதன் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும் அதிகம். லட்சக்கணக்கானோர் யூ டியூபை முழு நேர வேலையாக இதனை செய்து கொண்டிருக்கின்றனர்.  

சரியான கன்டென்ட்

இதில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் சரியான உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது. மக்கள் பார்க்கவும் கேட்கவும் விரும்பும் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். அந்த கன்டென்ட் மக்களுடன் நேரடியாக தொடர்புடையதாகவும், பிரச்சனையை வெளிப்படையாக பேசுவதாகவும் இருப்பது அவசியம். நகைச்சுவையை பொறுத்தவரை மிகவும் விரும்பிப் பார்க்கும் கன்டென்டாக இருக்கிறது. உங்கள் கன்டென்ட் மக்களோடு ஒன்றிவிட்டால், நாள்தோறும் உங்கள் வீடியோக்களை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். 

YouTube நேரலை

யூ டியூப்பில் பிரபலமாக இருக்க நீங்கள் அடிக்கடி லைவ் செய்ய வேண்டும். மக்களுடன் பேச வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கருத்துகளையும், விமர்சனங்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நீங்கள் சரியாக செய்யும்பட்சத்தில் உங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

YouTube Shorts உருவாக்கவும்

மக்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களை அதிகம் விரும்புகின்றனர். நீங்கள் எந்த வீடியோவை பதிவிட்டாலும் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. மிக மிக குறுகிய வீடியோவாக இருப்பதால், மக்கள் எளிதாக ஸ்க்ரோல் செய்து சிறிய கிளிப்களைப் பார்க்கிறார்கள். யூடியூபர்கள் இதிலிருந்து எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக மிக மிக குறைவான நேரம் மட்டுமே எடுக்கும்.

தரமான வீடியோ எடிட்டிங்

வீடியோவின் தரம் மற்றும் அதன் எடிட்டிங் உங்கள் சந்தாதாரர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் ஒரு நல்ல தலைப்பைத் தேர்வு செய்து, அந்த வீடியோவின் தரம் சரியாக இல்லை என்றால், மக்கள் அந்த வீடியோவை புறக்கணித்துவிடுவார்கள். தரமான வீடியோ குவாலிட்டியுடன், எபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங்கும் மிக முக்கியம்.

மேலும் படிக்க: ரூ.20 ஆயிரத்துக்குள் இருக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

மேலும் படிக்க: ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போன்

மேலும் படிக்க: Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News