மின்சாரத்தில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சாதனங்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறோம். குளிர்காலத்தில் தண்ணீர் அதிக ஜில்லென்று இருக்கும் என்பதால், மக்கள் தண்ணீரை சூடாக்க கீசர்கள் அல்லது இம்மர்ஷன் ராட்கள் எனப்படும் சிறப்பு கம்பிகளை பயன்படுத்துகின்றனர். இந்த வாட்டர் ஹீட்டர் கம்பிகளை நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு விதிகள் உள்ளன.
வீட்டில் கீசர்கள் நிறுவ நிறைய பணம் செலவாகும், எனவே பலர் வாட்டர் ஹீட்டர் கம்பிகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் அவை குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த கம்பிகளை நாம் சரியான வழியில் பயன்படுத்தாவிட்டால் ஆபத்து ஏற்படலாம். இதன் மூலம் ஷாக் அடித்து இறந்தவர்களுக்கு உள்ளனர். எனவே இவற்றை பயன்படுத்தும் முன்பு என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Google Maps உடன் போட்டியிடும் இந்தியாவின் MapmyIndia Maps... இரண்டில் எது சிறந்தது
வாட்டர் ஹீட்டர் கம்பிகளை பயன்படுத்தும் முன்பு:
பழைய கம்பிகளைப் பயன்படுத்தாதீர்கள்: தண்ணீரைச் சூடாக்க வேண்டும் என்றால், தேய்ந்த அல்லது பழைய வாட்டர் ஹீட்டர் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
பொருத்தமான வாளியை பயன்படுத்தவும்: வாட்டர் ஹீட்டர் கம்பிகளை எப்போதும் ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைக்கவும். இரும்பு வாளிகள் ஆபத்தானவை என்பதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
பாதுகாப்பாக ஸ்விட்ச் ஆன் செய்யவும்: கேபிள் ஏற்கனவே தண்ணீரில் இருக்கும் போது மட்டுமே வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். ஆன் செய்த பிறகு வாளியை தொட வேண்டாம்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்: ஹீட்டர் பயன்பாட்டில் இருக்கும் போது வாளியில் தண்ணீர் குறைவாக இருந்தால் அதில் மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம். இது கடுமையான மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
வெந்நீரைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்: ஹீட்டர் இயங்கும் போது வாளியில் இருந்து சூடான நீரை எடுப்பதைத் தவிர்க்கவும். வாட்டர் ஹீட்டரை அனைத்து விட்டு எடுப்பது நல்லது.
அகற்றுவதை அவசரப்படுத்த வேண்டாம்: தண்ணீர் சூடான உடனே வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுக்க வேண்டாம். தண்ணீரில் இருந்து வாட்டர் ஹீட்டரை அகற்றுவதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.
தண்ணீரை அதிக சூடாக்க வேண்டாம்: சிலர் வாட்டர் ஹீட்டர் கம்பிகளை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருக்கின்றனர். ஆனால் இது பாதுகாப்பற்றது. தண்ணீர் போதுமான அளவு சூடாக இருக்கும் போதே எடுக்க வேண்டும்.
புதிதாக வாங்கும் போது: வாட்டர் ஹீட்டர் கம்பியை புதிதாக வாங்கும் போது கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஐஎஸ்ஐ சீல் இருக்கிறதா? 1500 முதல் 2000 வாட்ஸ் மற்றும் 230-250 வோல்ட் வரை இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தவும்.
போதுமான தண்ணீரை நிரப்பவும்: வாட்டர் ஹீட்டர் கம்பி தண்ணீருக்கு அடியில் இருக்கும்படி வாளியில் போதுமான தண்ணீரை வைக்க உறுதி செய்யவும். இப்படிச் செய்தால், வாட்டர் ஹீட்டர் வயர்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதோடு, விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ