இனி மெசேஜை டெலீட் செய்ய வேண்டாம்; வாட்ஸ்அப் அப்டேட் - என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் செயலில் தவறான குறுஞ்செய்திகளை இனி எடிட் செய்யும் வகையில், அந்நிறுவனம் அப்டேட் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2022, 11:09 PM IST
  • வாட்ஸ்அப் செயலி மெட்டா (அப்போது பேஸ்புக்) நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
  • வாட்ஸ்அப் செயலில் மெசேஜ்களை எடிட் செய்ய, பீட்டா வெர்ஷன் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
  • மெசேஜ்களை எடிட் செய்தால், அதன் மேல் எடிடட் என குறிப்பிடப்படும்.
இனி மெசேஜை டெலீட் செய்ய வேண்டாம்; வாட்ஸ்அப் அப்டேட் - என்ன தெரியுமா? title=

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்துவருகிறது.

இதனால், பயனர்களின் வசதிக்கேற்ப புது புது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒலிப்பதிவு செய்யும்போது நிறுத்தி மீண்டும் பதிவு செய்வது போன்ற அப்டேட்கள் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் படிக்க | 'தேங்கஸ் ப்ரோ...' ஹாக்கருக்கே ரூ. 2 கோடி அனுப்பிய கூகுள் - கடைசியில் செம ட்வீஸ்ட்

இவை மட்டுமின்றி, பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் அளித்து வருகிறது. இந்நிலையில், வித்தியாசமான புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, மாற்றிக்கொள்ளும் (Edit) வகையில் புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அனுப்பிய குறுஞ்செய்தியை இனி அழிக்கவோ, தவறு என குறிப்பிடவோ வேண்டாம். குறுஞ்செய்தி அனுப்பியவரே அவற்றை எடிட் செய்துகொள்ளலாம். மேலும், எடிட் செய்தால், அதன் மேலே எடிடட் என சுட்டிக்காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இது தற்போது பீட்டா வெர்ஷனாக சிலரின் பயன்பாட்டுக்கு மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற வாட்ஸ்அப் பயனர்கள் அப்டேட் வெர்ஷனை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒருவர் எடிட் செய்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால், அப்டேட் செய்யாத பயனாளருக்கு அந்த குறுஞ்செய்தி காட்டப்படாது. எனவே, அந்த குறுஞ்செய்தியை படிக்க அவர் கண்டிப்பாக அப்டேட் செய்தாக வேண்டும் என்பது வாட்ஸ்அப்பின் வழிமுறைகளின் ஒன்று. ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பிய பின், எவ்வளவு மணிநேரம் வரை அதை எடிட் செய்யலாம் என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

மேலும் படிக்க | HOVERBIKE: பைக்கில் பறப்பவரா? இனி பறக்கும் பைக்கிலேயே பறக்கலாம்! வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News