Whatsapp Avatar அம்சம் அறிமுகம், சேட்டிங் இனி வேற லெவலில் இருக்கும்: உங்க அவதாரம் என்ன?

Whatsapp Avatar: வாட்ஸ்அப் பயனர்களுக்கு அட்டகாசமான செய்தி உள்ளது!! மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமையன்று தனது நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் அவதாரங்களைக் கொண்டுவருவதாக அறிவித்தார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2022, 02:56 PM IST
  • வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அவதாரம்.
  • சூப்பராக உங்கள் அவதாரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
  • புதிய அம்சத்தால் குஷியில் பயனர்கள்.
Whatsapp Avatar அம்சம் அறிமுகம், சேட்டிங் இனி வேற லெவலில் இருக்கும்: உங்க அவதாரம் என்ன?  title=

வாட்ஸ்அப் சமீபத்திய அம்ச புதுப்பிப்புகள்: வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல புதுப்பிப்புகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இதன் சமீபத்திய புதுப்பிப்பாக 'அவதார்'-களை உருவாக்கி ஷேர் செய்யும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமையன்று தனது நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் அவதாரங்களைக் கொண்டுவருவதாக அறிவித்தார். வாட்ஸ்அப்பில், பயனர்கள் இப்போது தங்களின் தனிப்பயனாக்கப்பட்ட அவதாரங்களை சுயவிவரப் புகைப்படங்களாக (ப்ரொஃபைல் பிக்சர்) பயன்படுத்தலாம் அல்லது பலவிதமான உணர்ச்சிகளையும் செயல்களையும் பிரதிபலிக்கும் 36 தனிப்பயன் ஸ்டிக்கர்களில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.

“அவதார்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருகிறோம்! இப்போது உங்கள் அவதாரத்தை சேட்களில்  ஸ்டிக்கராகப் பயன்படுத்தலாம். எங்கள் எல்லா செயலிகளிலும் விரைவில் கூடுதல் ஸ்டைல்கள் வரவுள்ளன” என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.

உங்கள் அவதார் என்பது உங்களின் டிஜிட்டல் பதிப்பாகும். இது பல பில்லியன் சிகை அலங்காரங்கள், முக அம்சங்கள் மற்றும் ஆடைகளின் கலவையிலிருந்து உருவாக்கப்படலாம்.

“அவதாரை அனுப்புவது என்பது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வேகமான மற்றும் வேடிக்கையான வழியாகும். உங்கள் உண்மையான புகைப்படத்தைப் பயன்படுத்தாமல் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். எனவே இது மிகவும் தனிப்பட்ட உணர்வை (ப்ரைவேட்) தருகின்றது” என்று WhatsApp தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போனை இலவசமாக வாங்க அரிய வாய்ப்பு, முந்துங்கள் 

லைட்டிங், ஷேடிங், ஹேர் ஸ்டைல் டெக்ஸ்ச்சர் உள்ளிட்ட ஸ்டைல் மேம்பாடுகளை தொடர்ந்து வழங்குவதாக நிறுவனம் கூறியது. மேலும் அவை காலப்போக்கில் பயனர்களின் அவதார்களை இன்னும் சிறப்பாக மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜுக்கர்பெர்க், பயனர்கள் பல வித விஷயங்களை ஆராய்வதையும், அதிவேக உலகங்களை உருவாக்குவதை பார்க்க தான் ஆசைப்படுவதாகவும், மேலும் இதை விரைவில் பல நாடுகளுக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். 

"ஹாரிசான் உலகில், அனைவரும் தங்கள் அனுபவத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும் கூடுதல் கருவிகள் மற்றும் அம்சங்களைச் சேர்க்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம்" என்று மெட்டா ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறியிருந்தது.

Meta தனது VR இயங்குதளமான Horizon Worlds இல் இதுவரை இல்லாத அதன் மெய்நிகர் அவதாரங்களில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் அவதார் என்றால் என்ன, வாட்ஸ்அப்பில் அவதாரை எப்படி உருவாக்குவது?

- WhatsApp இல் உங்கள் அவதாரத்தை உருவாக்க, WhatsApp இன் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும்.

- வாட்ஸ்அப்பைத் திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவைக் கிளிக் செய்யவும்.

- இப்போது, "அமைப்புகள்" (Settings) என்பதைக் கிளிக் செய்து, பின்னர் "அவதார்" என்பதைக் கிளிக் செய்யவும்.

- பின்னர், "உங்கள் அவதாரத்தை உருவாக்கு" என்பதைக் கிளிக் செய்து, "தொடங்கு" என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் அவதாரத்தை ப்ரொஃபைல் போட்டோவாக பயன்படுத்துவது எப்படி

- செட்டிங்கில் "அவதார்" என்பதைக் கிளிக் செய்து, "Create profile photo" என்பதைக் கிளிக் செய்யவும்.

- கிடைக்கும் பல அவதார் போஸ்கள் மற்றும் பின்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.

- பிறகு, மேல் வலது மூலையில் உள்ள டிக் குறியைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் ப்ரொஃபைல் போட்டோ புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News