Jio Coin App பற்றி எங்களுக்கு தெரியாது? ஜியோ நிறுவனம் மறுப்பு!

Jio Coin App பற்றி எங்களுக்கு தெரியாது என்று ஜியோ மறுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Last Updated : Feb 2, 2018, 06:58 PM IST
Jio Coin App  பற்றி எங்களுக்கு தெரியாது? ஜியோ நிறுவனம் மறுப்பு!  title=

ரிலையன்ஸ் ஜியோ தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதையடுத்து, இதற்கு போட்டியான பல நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல சலுகைகளை வழங்கினாலும் ஜியோவை முந்தமுடியவில்லை.

என்னென்றால் ஜியோ நிறுவனம் தனது தனது மை ஜியோ செயலி மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மியூசிக், ஜியோ பே, ஜியோ மூவி என பல்வேறு ஆப் மூலம் தனது சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் ஒரு புதிய ஆப் செயல் பட்டு வருகின்றது.

இந்த ஆப் ஜியோ நிறுவனத்தின் ஆப் இல்லை என்றும் இதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News