வருகின்ற 2020-ம் ஆண்டு 2-ஜி அலைவரிசை சேவை வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 2-ஜி போன்களை புதியதாக அறிமுகம் செய்துள்ளது விவா நிறுவனம். இந்தியாவில் உள்ள மொபைல் போன் சந்தை உலகளாவிய பல்வேறு உற்பத்தியாளர்கள் பல மாதிரியான பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் விவா வி1 பீச்சர் போன் ஆனது ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் வருகையினால் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்ட் போன்களில் இருந்து திரும்ப பழை மாடல் மொபைல்களுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது தேவையை பூர்த்தி செய்யவதே இந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாம்.
விவா வி1 பீச்சர் போனின் சிறப்பு அம்சங்கள்:- 1.44-இன்ச் மோனோக்ரோம் டிஸ்பிளே, ஒரு சிம் கார்டு ஸ்லாட், 2-ஜி நெட்வொர்க், விசைப்பலகை, எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட், 650-எம்.ஏ.எச் பேட்டரி, snake game மற்றும் 1 ஆண்டு உத்தரவாதமும் உண்டு.