UPI vs NEFT: பணப்பரிவர்த்தனைக்கு எது சிறந்தது? அறிந்து கொள்வோம்

யுபிஐ மற்றும் நெஃப்ட் ஆகிய இரண்டு அம்சங்களும் பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவினாலும், அவற்றில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:14 PM IST
 UPI vs NEFT: பணப்பரிவர்த்தனைக்கு எது சிறந்தது? அறிந்து கொள்வோம் title=

ஆன்லைன் பேங்கிங் தற்போது இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பெரிய பரிவர்த்தனைகள் முதல் சிறிய பரிவர்த்தனைகள் வரை அனைத்திற்கும் மக்கள் ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள். ஆரம்பத்தில், பணப்பரிமாற்றத்துக்கு மக்கள் NEFT -ஐப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது மக்கள் GooglePay, PhonePay, BHIM UPI போன்ற UPI -ஐ பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு அம்சங்களும் பணப்பரிவர்த்தனைக்கு உதவினாலும், இரண்டு அம்சங்களில் எது சிறந்தது? மற்றும் பயன்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

மேலும் படிக்க | TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம்

UPI பயன்பாடு

UPI ஆனது மிகக் குறுகிய காலத்தில் முழு சந்தையையும் கைப்பற்றியுள்ளது. பணப் பரிமாற்றம் மிக எளிதாக இருப்பதால், ஏராளமான மக்கள் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மிக குறுகிய காலத்தில் மற்றொருவருக்கு பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், மக்கள் இதனை விரும்புவதற்கு மிக முக்கிய காரணம். இதில் பணப்பரிமாற்றத்துக்கு கட்டணங்கள் இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆனால் NEFT மூலம், நீங்கள் மேனுவலாக வங்கிக்கணக்கு எண் மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு பணப் பரிமாற்றத்தை செய்ய வேண்டியிருக்கும். இதற்கு கூடுதல் நேரமாகும். 

UPI சிறப்பம்சம் 

NEFT மூலம் பணத்தை அனுப்ப மட்டுமே முடியும். ஆனால், UPI மூலம் நீங்கள் பணம் அனுப்பவும் முடியும். ஒருவரிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதற்கு நீங்கள் அதிக தகவல்களை வழங்க வேண்டியதில்லை. உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் போதும். நொடிப்பொழுதில் பணப்பரித்தனையை மேற்கொள்ளலாம்.

NEFT சிறப்பம்சம்

சிறிய நிதிகளுக்கு UPI ஒரு சிறந்தது. ஆனால் பெரிய நிதி பரிவர்த்தனைகளுக்கு NEFT மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கு மோசடி நடக்க வாய்ப்பில்லை. இங்கு பணம் அனுப்பும் முன் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். பணம் அனுப்பியவர் மற்றும் பெற்றுக் கொண்டவர் என இருவருக்கும் கன்பார்ம் மெசேஜ் வந்து சேரும். பெரிய நிதி பரிவர்த்தனைக்கு NEFT சிறந்தது. 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமை போல இனி பேஸ்புக்கிலும் ரீல்ஸ் செய்யலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News