UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை

UPI Tips: இப்போது போன்பே, பேடிஎம் மற்றும் கூகிள் பே போன்ற யுபிஐ செயலியின் உதவியுடனும் நீங்கள் ஏடிஎம்-ல் இருந்தும் பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2022, 11:28 AM IST
  • கார்ட் இல்லாமல் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கலாம்.
  • யுபிஐ செயலி கொண்டு இதையும் செய்ய முடியும்.
  • முழு செயல்முறையை இங்கே காணலாம்.
UPI Tips: யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை title=

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி: ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க டெபிட் கார்டு அல்லது ஓடிபி அடிப்படையிலான செயல்முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம். எனினும், இப்போது போன்பே, பேடிஎம் மற்றும் கூகிள் பே போன்ற யுபிஐ செயலியின் உதவியுடனும் நீங்கள் ஏடிஎம்-ல் இருந்தும் பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இந்த அம்சம் குறித்து சில காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இப்போது என்சிஆர் கார்ப்பரேஷன் அனைத்து ஏடிஎம்களையும் மேம்படுத்தி வருகிறது. இயந்திரம் மேம்படுத்தப்பட்ட பிறகு, யுபிஐ செயலி மூலம் இயங்கக்கூடிய கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராயல் (ஐசிசிடயிள்யு) செய்யலாம். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள் 

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன், சில விஷயங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும். இந்த அம்சம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்க அனுமதிக்கும் என்பதால், இந்த அம்சம் ஏடிஎம் இயந்திரத்திலும் இன்-பிள்ட் ஆக இருக்க வேண்டும். மேலும், உங்கள் மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனுடன் உங்கள் மொபைலில் ஏதாவது யுபிஐ செயலியும் கண்டிப்பாக இருக்கும். 

மேலும் படிக்க | USSD: இணைய வசதி இல்லாமலும் போன் மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா?

இதற்கான செயல்முறை இதோ:

டெபிட் கார்ட் இல்லாமல், வெறும் யுபிஐ செயலி கொண்டு பணத்தை எடுக்கும் செயல்முறையை இங்கு காணலாம். 

- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள்பே, போன்பே, பேடிஎம், வாட்ஸ்ஆப் பே மற்றும் அமேசான் பே ஆகியவற்றிலிருந்து ஒரு யுபிஐ செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

- இந்த வசதியைப் பயன்படுத்தும் போது போனில் இணையம் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

- இதன் பிறகு ஏடிஎம் இயந்திரத்திற்குச் சென்று பணத்தை எடுப்பதற்கான ‘வித்ட்ரா கேஷ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

- இப்போது யுபிஐ ஆப்ஷன் உங்கள் முன் வரும். இதை கிளிக் செய்தால், ஏடிஎம் திரையில் கியூஆர் குறியீடு தோன்றும்.

- இப்போது உங்கள் மொபைலில் ஏதேனும் ஒரு யுபிஐ செயலியைத் திறந்து கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

- இதற்குப் பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை ஏடிஎம் இயந்திரத்தில் டைப் தட்டச்சு செய்யவும்.

- இந்த அம்சத்தின் கீழ், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். 

- தொகையை உள்ளிட்ட பிறகு, ‘ப்ராசஸ்ட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது உங்களிடம் பின் விவரம் கேட்கப்படும், உங்கள் யுபிஐ பின்னை இங்கே உள்ளிடவும்.

- அதன் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் வெளிவரும். 

மேலும் படிக்க | Whatsapp பயனர்கள் அலர்ட்: ஒரே காலில் கணக்கு ஹேக், நண்பர்கள் பணமும் காலியாகிவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News