365 நாட்கள் வேலிடிட்டி.. எக்கச்சக்க சலுகைகள்.. BSNL மாஸ் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2023, 09:48 AM IST
  • ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களின் இதயங்களை வென்றது.
  • பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம்.
  • பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.
365 நாட்கள் வேலிடிட்டி.. எக்கச்சக்க சலுகைகள்.. BSNL மாஸ் பிளான் title=

பிஎஸ்என்எல் 365 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்: இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இப்போது அசத்தலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, அவை மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. நீங்களும் BSNL பயனர்களாக இருந்தால், இந்த வாய்ப்பு நீங்கள் தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில் பிஎஸ்என்எல் தற்போது இப்படி ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டுவிட்டால், நீங்கள் வருந்தப்பட வேண்டியிருக்கும்.

இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1515 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகளைப் பெறுகின்றனர். எனவே உடனடியாக ரீசார்ஜ் செய்து நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் இதுபோன்ற வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்காது.

மேலும் படிக்க | சமோசாவை ஆன்லைனில் ஆர்டர் செய்த டாக்டர்... மோசடியில் சிக்கி ரூ. 1.40 லட்சம் காலி - அது எப்படி?

ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களின் இதயங்களை வென்றது
பயனர்களின் மனதைக் கவரும் வகையில் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் கொஞ்சம் கூட தவறவிட்டால், நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். வாருங்கள் இப்போது நாம் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது ஒரு டேட்டா திட்டம் ஆகும். எனவே அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றிற்கு வேறு ஒரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்ற அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டம் அனைத்து வட்டங்களிலும் கிடைக்காமல் போகலாம், இதை BSNL ஆப் அல்லது இணையதளத்தில் நீங்கள் சரிப்பார்க்கலாம்.

ரீசார்ஜ் எப்படி செய்வது
பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do . அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | பெற்றோர்களே அலர்ட்... ஒரே ஸ்கேனிங்கில் வங்கி அக்கவுண்டை காலி செய்யும் மோசடி கும்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News