Flipkart Sale: நம்ப முடியாத தள்ளுபடியுடன் iPhone 13 -ஐ வாங்க பிளிப்கார்ட்டில் சூப்பர் வாய்ப்பு

Flipkart Sale:நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2023, 11:54 AM IST
  • பிளிப்கார்ட்டில் தற்போது எந்த விற்பனையும் இல்லை.
  • இருப்பினும், ஒரு அற்புதமான டீலின் மூலம் ஐபோனை வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
  • இந்தச் சலுகையில், மிகக் குறைந்த விலையில் ஒரு சிறந்த போனை நீங்கள் வாங்க முடியும்.
Flipkart Sale: நம்ப முடியாத தள்ளுபடியுடன் iPhone 13 -ஐ வாங்க பிளிப்கார்ட்டில் சூப்பர் வாய்ப்பு title=

பிளிப்கார்ட் விற்பனை: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கும் ஐபோன் பிரியர்களுக்கும் ஒரு சூப்பர் செய்தி!! இந்த கோடை சீசனில், பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை நடந்து வருகிறது. நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தற்போது எந்த விற்பனையும், அதாவது சேலும் இல்லை. 

எனினும், பிளிப்கார்ட்டில் எந்த விற்பனையும் இல்லையென்றாலும், இந்த தளத்திள் உள்ள, ஒரு அற்புதமான டீலின் மூலம்  ஐபோனை வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். இந்தச் சலுகையில், மிகக் குறைந்த விலையில் ஒரு சிறந்த போனை நீங்கள் வாங்க முடியும். இந்த டீலின் முழு விவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஆப்பிள் ஐபோன் 13 இன் அம்சங்கள்

APPLE iPhone 13: இதில் கிடைக்கின்றன அசத்தலான சலுகைகள்

ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஐபோனை சிறப்புச் சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஐபோன் 13 ரூ. 69,900 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஐபோனின் விலை ரூ. 60,999 ஆக குறைகிறது. இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். இதை தவிர, இந்த டீலில் 5 சதவீத கேஷ்பேக் மற்றும் பல வங்கிச் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | அதிரடி சலுகை! ரூ.20000க்குள் கிடைக்கும் சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!

ஐபோனில் இஎம்ஐ சலுகை

இது தவிர, அதே நேரத்தில், ஐபோன் 13 ஐ மாதத்திற்கு ரூ. 2,542 இஎம்ஐ -இல் வாங்கலாம். இதுதவிர ரூ. 38,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், அதாவது பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் உங்கள் பழைய போனை கொடுத்து, அதற்கு பதிலாக புதிய போனின் விலையை குறைக்கலாம். ஆனால் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் இணையதளத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த டீல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கக்கூடும் என்பதையும் வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த டீல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் அல்லது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மூடப்படலாம்.

கூடுதல் தகவல்

ஐபோன் 15: கசிந்த தகவல்கள்

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இது குறித்த கசிவுகள் மற்றும் வதந்திகள் சில நாட்களாக ஐபோன் பிரியர்களுக்கு இடையே பலமான சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2023 -இல் வரவுள்ள இந்த ஐபோன் எப்படி இருக்கும் என்று கசிவுகள் கூறியுள்ளன. iPhone 14 Pro இன் நான்கு அம்சங்கள் iPhone 15 இல் கிடைக்கும் என இந்த கசிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ. 1.2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த போனில் இந்த அம்சங்கள் கிடைக்கின்றன. 

கடந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஐபோன் 15 மற்றும் பிளஸில் கிடைக்கும் என கசிவுகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்த முறை போன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனம் எதுவும் கூறவில்லை. இந்த வடிவமைப்பு தற்போது ப்ரோ மாடல்களில் கிடைக்கின்றது. கடந்த ஆண்டு, ஐபோன் 14 எந்த வடிவமைப்பு மாற்றமும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​அது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை வடிவமைப்பு மாற்றங்களைக் காண முடியும் என ஊகிக்கப்படுகிறது. 

( பொறுப்புத் துறப்பு: மேலே உள்ள விவரங்கள் தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஜீ மீடியா எந்த சலுகை / பொருள் / தள்ளுபடியையும் அங்கீகரிக்கவில்லை. சலுகைகளைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். எந்தவொரு நிதி இழப்புக்கும் ஜீ மீடியா பொறுப்பாகாது என்பதை நினைவில் கொள்ளவும்.)

மேலும் படிக்க | ஸ்மார்ட்போனை இந்தியர்கள் எதற்கெல்லாம் அதிகம் பயன்படுத்திகிறார்கள் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News