புதுடெல்லி: மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம். அரசாங்கம் ட்விட்டருக்கு அளித்த பட்டியலைக் குறித்து பேச எதுவும் இல்லை என அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊடக அறிக்கையின்படி, விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ட்விட்டர் அகௌண்டுகளை அகற்றுவதில் ட்விட்டர் தாமதப்படுத்தியதால் தாங்கள் தங்கள் பொறுமையை இழந்துவிட்டதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், 'காலிஸ்தான்' அனுதாபிகளால் ஆதரிக்கப்பட்டு பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட தனிநபர்களால் இயக்கப்படும் 1,178 ட்விட்டர் கணக்குகளின் பட்டியலை அரசாங்கம் ஒப்படைத்திருந்தது. மேலும் நாட்டில் விவசாயிகளின் போராட்டம் (Farmers Protest) குறித்து தவறான தகவல்களை பரப்ப இந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை அறிவிக்கப்பட்டபடி, இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் ட்விட்டர் இந்தியா (Twitter India) அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை மேற்கொண்டு, ‘உழவர் இனப்படுகொலை’ என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி கண்டனம் தெரிவித்தார். இந்த ஹேஷ்டேக்கை அகற்ற அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் ட்விட்டர் செயல்பட்ட விதம் குறித்து அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ALSO READ: Twitter-க்கு மாற்றான Koo தளத்திற்கு இந்திய அமைச்சர்கள் மாறக் காரணம் என்ன..!!!
இந்திய சட்டங்களை ட்விட்டருக்கு அரசு நினைவூட்டுகிறது
உழவர் இனப்படுகொலை என்று குறிப்பிடும் இதுபோன்ற தவறான, பொய்யான, பொறுப்பற்ற கருத்துகள் பரப்பப்படும் போது, இவை பதட்டமான சூழலின் உருவாக்கத்திற்கும், தேவையற்ற கலவரங்களுக்கும் வழிவகுக்கின்றது என்று செயலாளர் கூறினார். வன்முறையைத் தூண்டிவிடும் இத்தகைய செயல்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 ன் கீழ் பத்திரிகை சுதந்திரம் அல்லது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக 'போலியான, சரிபார்க்கப்படாத, அநாமதேய மற்றும் பொறுப்பற்ற தானியங்கி போட் கணக்குகளை அதன் தளத்தில் இயக்க அனுமதிக்கும் விதம், இந்த தளத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆரோக்கியமான உரையாடலுக்கான அதன் அர்ப்பணிப்பு குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது' என்றும் அரசாங்கம் ட்விட்டர் தலைமைக்கு அறிவித்தது.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள ட்விட்டர் தலைமை இந்திய சட்டங்கள் மற்றும் விதிகள் மீதான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்திய அரசாங்கத்திற்கும் (Indian Government) ட்விட்டரின் உலகளாவிய குழுவிற்கும் இடையே சிறந்த ஈடுபாட்டையும் கோரியுள்ளது.
ALSO READ: மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸ் எதிரொலி... சரி பேசலாம் என்கிறது ட்விட்டர்..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR