இந்த புத்தாண்டில் கார் வாங்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா? பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த பட்ஜெட் விலை கார்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
10 லட்சத்திற்கும் குறைவான கார்கள்
இப்போதெல்லாம் பல்வேறு விதமான கார்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு வகையிலும் நல்ல கார்களின் கலெக்ஷன் உள்ளது. நீண்ட பட்டியலில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்யலாம். ஆனால் சில கார்கள் மட்டுமே பாதுகாப்பு மற்றும் பட்ஜெட் ரீதியாகவும் அனைவருக்கும் ஏற்றவையாக உள்ளன.
அப்படிப்பட்ட சில கார்கள் பற்றிய தகவல்களை கொண்டு வந்துள்ளோம். 10 லட்சத்திற்கும் குறைவான இந்த கார்கள், பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானவையாக இருக்கின்றன.
அதிக வலிமை வாய்ந்த ஸ்டீல், ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை அமைப்பு, பாதுகாப்பு பெல்ட் எச்சரிக்கை அமைப்பு, பின்புற இருக்கை பெல்ட், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு போன்றவை பாதுகாப்புக்காக இந்த கார்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசதிகளால் சில கார்களின் விலை சற்று அதிகரிக்கிறது. பட்ஜெட் வரம்பில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் கார்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | 2024ம் ஆண்டில் மிரட்ட வரும் புதுக் கார்களின் பட்டியல்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ரூ.5.92 லட்சத்தில் தொடங்கி ரூ.8.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையில் விலை கொண்ட கார் இது.
ஹூண்டாய் எக்ஸெட்டர்: ரூ.6.12 லட்சத்தில் தொடங்கி ரூ.9.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையில் விலை கொண்ட கார் இது.
ஹூண்டாய் ஆரா: இதன் விலை ₹ 6.48 லட்சத்தில் தொடங்கி ₹ 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையில் விலை கொண்ட கார் இது.
ஹூண்டாய் ஐ20: இதன் விலை ரூ.7 லட்சத்தில் தொடங்கி ரூ.11.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
ஹூண்டாய் வெனு (Hyundai Venue): இதன் விலை ரூ.7 லட்சத்தில் தொடங்கி ரூ.11.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
டாடா நெக்ஸான்: இதன் விலை ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.6.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.
இந்த கார்களின் அனைத்து வகைகளிலும் குறைந்தது 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. இதில் ஊள்ள 6 ஏர்பேக்குகள் தரமானவை என்பதால் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கின்றன. எதிர்பாராத விதமாய் விபத்து ஏற்பட்டாலும், ஆபத்தை குறைக்க ஏர்பேக்குகள் உதவுகின்றன, உயிரைக் காப்பாற்றும் பாதுகாப்பு கொண்ட கார்கள் இவை.
பெரிய குடும்பங்கள், வணிக பயன்பாடுகள் மற்றும் தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற இந்த கார்கள், சக்திவாய்ந்த எஞ்சின்கள் மற்றும் சிறந்த இடத்தால் ஆனவை. அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியாவில் பல புதிய 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க | பேம்லிக்கு ஏற்ற கார் தேடுகிறீர்களா? விரைவில் அறிமுகமாகும் 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ