கொரோனா முழு அடைப்பு காரணமாக பல்வேறு அலுவலங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க அனுமதித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு முக்கியமான ஒரு பிரச்சனை தரவு (DATA) பயன்பாடு தான். எப்போது தரவு முடிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வேலை பார்க்க வேண்டிய சூழலில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கனமாக தரவை பயன்படுத்தி நிம்மதியாக வேலை பார்க்க ஒரு வழியை நாம் இந்த பதிவில் உங்களுக்கு தெரிவிக்க இருக்கிறோம்.
பெரும்பாலும் நமது தரவுகளை குடிப்பது வீடியோக்கள் தான், சில வலை பக்கங்களை நாம் திறக்கும் போது அவை தானாக வீடியோக்களை(விளம்பரங்களாக) தானியக்கும். இந்த தானியக்க வீடியோக்கள் நமது பெரும்பான்மை தரவுகளை முடித்துவிடுகிறது. எனவே Google Chrome-ல் இந்த வீடியோ தானியக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை குறித்து நாம் முதலில் அறிந்துக்கொள்வோம்.
இந்த விஷயத்தில் நாம் முதலில் ஒலியுடன் மற்றும் ஒலி இல்லா மீடியாவை தானாக விளையாடுவதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும், ஏனெனில் இது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
இந்த தானியங்கி வீடியோக்கள் சில தளங்களில் நன்மை பயக்கும். குறிப்பாக நீங்கள் யூடியூப் பார்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இந்த தளத்தில் உங்கள் விருப்பமான வீடியோக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு முறை என வீடியோக்களை இயக்க முடியாது., இந்த இடத்தில் தானியங்கி வீடியோ முறைமை இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். ஆனால் பல தளங்களில் இவ்வாறான அம்சத்தை நாம் எதிர்பார்ப்பதில்லை.
எனவே உங்கள் விருப்பதிற்கு ஏற்ப உங்கள் விருப்ப தானியங்கி அம்சத்தை உண்டாக்க பின்வரும் அமைப்புகளை பின்பற்றுங்கள்...
- Menu > Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Site Settings செயல்படுத்தி, திறக்கும் பக்கத்தில் Media-வைத் தேர்ந்தெடுக்கவும்.
- Auto-play-வை தட்டவும்.
- இங்கு உள்ள Toggle-யை முடக்குவதால் நிலைமாற்றலாம்.
அவ்வாறு செய்வது பெரும்பாலான தளங்களில் தானாக ஒளிப்பரப்பாகும் வீடியோக்களை நாம் தடுக்கலாம். Chrome-ன் டெஸ்க்டாப் பதிப்புகளில் இந்த விருப்பம் கிடைக்காது, Android இயங்குதளத்தில் இயங்கும் கைபேசிகள், டேப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Chrome-ல் மீடியாவை தானாக ஒளிப்பரப்பவதை தடுக்க மூன்றாம் தரப்பு extensions ஒன்றை நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால் நீங்கள் பார்வையிடும் தளங்களைப் பொறுத்து உங்கள் வெற்றி மாறுபடலாம்.
எனினும், கூகிள் Chrome 61-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய flag, இணைய உலாவியின் பயனர்களுக்கு உலாவியின் தானியங்கு நடத்தை மீது கட்டுப்பாட்டை கொண்டுவர அணுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...