குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்! அரசின் புதிய அறிவிப்பு

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து  நல்வழிப்படுத்தும் அந்த டாஸ்மாக் ஊழியருக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2023, 02:40 PM IST
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு
  • குடிமகன்களை நல்வழிப்படுத்த வேண்டும்
  • அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்! அரசின் புதிய அறிவிப்பு title=

கோவை மாவட்டம் சூலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். முன்னதாக இருகூர் பேரூராட்சியில் முன் கள தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் தினம் தோறும் எங்களிடம் இன்று எத்தனை நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தீர்கள்? அதனால் எத்தனை பொதுமக்கள் நலம் பெற்றனர்? என கேட்டு தெரிந்து கொள்வார். பள்ளியில் ஆசிரியர் மாணவர்களிடம் ரிப்போர்ட் கார்டு வாங்குவது போல  திட்டங்களை குறித்து அறிந்துகொண்டு அவரிடம் கொடுத்து வருகிறோம். 

மேலும் படிக்க | டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

அனைத்து அமைச்சர்களும் காலை உணவு திட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒரு பள்ளியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு உபாதை ஏற்பட்டது. அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குச் சென்றதும், அனைத்து பள்ளிகளிலும் வியாழக்கிழமை  மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு அதனை முதல்வர் சரிப்படுத்தினார் என பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இருகூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி 2000 பேருக்கு நாள்தோறும் இப்பகுதியில் உணவு வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. 

தூய்மை பணியாளர்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பல நாட்களாக இருந்து வரக்கூடிய நடைமுறை இது திடீரென அதனை மாற்ற முடியாது, ஆனால் நிச்சயமாக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கும். பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்படும் ரைடு நடப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டாஸ்மாக் ஊழியர்களுக்கான போனஸ் அனைத்து தர பணியாளர்களுக்கும் கிடைக்கும் போது கிடைக்கும், டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, புகார்கள் வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அத்தகைய கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். 

முதல்வர் ஸ்டாலின் இதற்கும் ஒரு தீர்வை கொடுத்திருக்கிறார். அதில் மது கடைக்கு வரும் புதிய நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அத்தகைய நபர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுத்து குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க வேண்டுமென முதல்வர் கூறி இருக்கிறார். மது விற்பனை மற்றும் புழக்கத்தை குறைக்க அனைத்து வகைகளிலும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு மேலாக 10 ரூபாய் வாங்கப்படுவது சில கடைகளில் இருந்து வருகிறது. அதனை முழுவதுமாக குறைக்க அது சரி செய்யப்படும். 95 சதவீதம் இந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News