Samsung Galaxy M52 5G: Samsung 5G ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் இல்லாமல் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அருமையான இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டுவிடாதீர்கள். பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் சாம்சங் மிகவும் நம்பகமான மற்றும் நல்ல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த நிறுவனத்தின் 5 ஜி ஸ்மார்ட்போன் அதிரடியான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போன் தான் இவ்வளவு குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்
Samsung Galaxy M52 5G கடந்த ஆண்டு செப்டம்பரில் சாம்சங்க் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கும் இந்தப் போனை எப்படி வாங்குவது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | மிகவும் மலிவான விலையில் 5G ஐபோன், விலையே இவ்வளவு தானா
10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஆஃபர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் கிடைக்காது. ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் மட்டுமே உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். எந்த வேரியண்ட் மொபைலை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 8ஜிபி ரேம் வேரியண்ட் மொபைல் ரூ.31,999-க்கு பதிலாக ரூ.21,999-க்கு விற்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மாடலை எடுத்துக் கொண்டால், 9 ஆயிரம் ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.29,999-க்கு பதிலாக ரூ.20,999-க்கு வாங்கலாம்.
Samsung Galaxy M52 5G அம்சங்கள்
Samsung Galaxy M52 5G மொபைல், 6.7 இன்ச் Super AMOLED Plus டிஸ்ப்ளே, FHD + ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைப் கொண்டிருக்கும். 32எம்பி முன்பக்க கேமரா மற்றும் 64எம்பி பிரைமரி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. Snapdragon 778G சிப்செட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.
மேலும் படிக்க | இனி டெலிகிராம் பயன்படுத்த கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR