Reliance Jio-வின் குடியரசு தின சிறப்பு சலுகை இதோ!!

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jan 24, 2018, 12:42 PM IST
Reliance Jio-வின் குடியரசு தின சிறப்பு சலுகை இதோ!! title=

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

> ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

> மற்ற திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

> ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 திட்டங்களில் முறையே 42 ஜிபி, 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி டேட்டா 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

> ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 56 ஜிபி, 140 ஜிபி, 168 ஜிபி மற்றும் 182 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியும் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் அறிவித்திருக்கும் புதிய திட்டங்களை ஜனவரி 26-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும். இத்துடன் 100% கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

Trending News