iPhone-ஐ மிஞ்சும் அம்சம், அசத்தும் Oppo போன்: விவரம் இதோ

ஸ்கோர் குறைவாக இருப்பதால் மற்ற அம்சங்களில் ஐ-போன் பின்தங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. பொதுவாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2021, 12:06 PM IST
iPhone-ஐ மிஞ்சும் அம்சம், அசத்தும் Oppo போன்: விவரம் இதோ title=

OPPO Reno6 5G: OPPO Reno6 5G, அசல் Reno6 தொடரின் மிகவும் மலிவு விலை மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு DXOMARK பேட்டரி மதிப்பாய்வுக்கு உட்பட்டது.

இந்த போன் சில அம்சங்களில் iPhone 13 Pro Max ஐ வென்று விட்டது. மிட்-ரேஞ் OPPO Reno6 5G தற்போது DXOMARK பேட்டரி தரவரிசையில் 96 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதற்குப் பிறகு, iPhone 13 Pro Max 89 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த விஷயத்தில் OPPO Reno6 5G முன்னிலையில் உள்ளது

மதிப்பாய்வின் படி, Reno6 5G அதன் பிரிவில் சிறந்த அடானமி ஸ்கோரைக் கொண்டுள்ளது. இது 50% திறனுக்குக் குறைவாக இருக்கும்போது வெறும் 5 நிமிட சார்ஜில் 10+ மணிநேர அடானமியைப் பெறுகிறது. 65W SuperVOOC 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங் நெறிமுறை காரணமாக இது சாத்தியமானது.

OPPO Reno6 5G: 35 நிமிடங்களில் முழு சார்ஜ்

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணிநேரம் 11 நிமிடங்கள் ஆகும். எனினும், Reno6 5G 35 நிமிடங்களிலேயே சார்ஜ் ஆகிவிடும். ஆனால் புதிய ஐபோனில் OPPO கைபேசியை விட சிறந்த அடானமி செயல்திறன் உள்ளது.

ALSO READ:Spotify நிகழ்நேர பாடல் வரிகள் அம்சத்தை உலகளவில் வெளியிட்டது 

செயல்திறனிலும், ஐபோன் (iPhone) 95 புள்ளிகளைப் பெறுகிறது. இது Reno6 5G போனின் 101 புள்ளிகளை விட சில புள்ளிகள் குறைவாகும். கூடுதலாக, OPPO ஸ்மார்ட்போன் இயக்கத்தில் சராசரியான திறனுடன் செயல்படுகிறது. கால்களைப் பற்றி பேசினால், இது சராசரிக்கும் குறைவான அடானமி செயல்திறனைக் கொண்டுள்ளது.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மெதுவாக சார்ஜ் ஆகும்

ஸ்கோர் குறைவாக இருப்பதால் மற்ற அம்சங்களில் ஐ-போன் பின்தங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. பொதுவாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த வகையில் அவரவருக்கு முக்கியமானதாகத் தோன்றும் அம்சங்களை ஆராய்ந்து ஐ-போன் அல்லது மற்ற போன்களை (Smartphones) தேர்ந்தெடுப்பது சரியானதாக இருக்கும்.

ALSO READ: ஐபோன் பயனாளர்களுக்கு நற்செய்தி! ஆப்பிள் நிறுவனம் அறிவித்த அட்டகாசமான திட்டம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News