Ola Electric Received Record of Rs 600 Crore: ஓலா தனது மின்சார ஸ்கூட்டர் விற்பனை மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. ஓலா நிறுவனம் ஒரே நாளில் ரூ .600 கோடி மதிப்புள்ள எஸ் 1 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக்கின் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஓலா 600 கோடி மதிப்புள்ள இ-ஸ்கூட்டர்களை ஒரே நாளில் அதாவது செப்டம்பர் 15 அன்று விற்றுள்ளதாக அவர் கூறினார். நிறுவனம் நொடிக்கு நான்கு OLA S1 மின்சார ஸ்கூட்டர்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது. இது தவிர, ஓலா எலக்ட்ரிக் 86 ஆயிரம் ஸ்கூட்டர்களின் விற்பனை அளவையும் எட்டியுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் ஒரு வரலாற்று சாதனையாகும்.
ஓலா இ-ஸ்கூட்டர் வரலாற்று சாதனையை பதிவு செய்தது
ஓலாவின் (Ola) தலைமை நிர்வாக அதிகாரி ட்வீட் செய்து, ”இந்தியா இப்போது பெட்ரோலை நிராகரித்து மின்சார ஸ்கூட்டரை நோக்கி நகர்கிறது. நாங்கள் ஒரு வினாடியில் 4 ஸ்கூட்டர்களை விற்று சாதனை செய்தோம். மேலும், ஒரே நாளில் ரூ. 600 கோடி மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்றுள்ளோம். இன்று ஓலா ஸ்கூட்டர் வாங்க கடைசி தேதி, அதாவது செப்டம்பர் 16, வியாழக்கிழமை, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய கடைசி தேதி ஆகும். வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை இரவு வரை வாங்கலாம், ஆனால் 12 மணிக்கு பிறகு ஸ்கூட்டரின் முன்பதிவு நிறுத்தப்படும்” என்று எழுதியுள்ளார்.
India is committing to EVs and rejecting petrol! We sold 4 scooters/sec at peak & sold scooters worth 600Cr+ in a day! Today is the last day, purchase will shut at midnight. So lock in this introductory price and buy on the Ola app before we sell out! https://t.co/TeNiMPEeWX pic.twitter.com/qZtIWgSvaN
— Bhavish Aggarwal (@bhash) September 16, 2021
ALSO READ: Ola Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே
ஓலா இ-ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது
ஓலா நிறுவனம், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற தனது மின்சார ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் 1000 நகரங்களில் அதன் விநியோகத்தை தொடங்கும். ஓலாவின் மின்சார ஸ்கூட்டரின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழு எல்இடி லைட்டிங் பேக்கேஜ் மற்றும் 7.0 இன்ச் டச் டிஸ்ப்ளே உள்ளது. இது வழிசெலுத்தல் வசதியையும் கொண்டுள்ளது. டிஸ்பிளேவில் 3-ஜிபி ரேம் உடன் ஆக்டா-கோர் செயலி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைஃபை, ப்ளூடூத் மற்றும் 4 ஜி இணைப்பும் வழங்கப்படுள்ளது.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய, ஓலா நிறுவனம் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு (Ola Women Workforce) வேலை வாய்ப்பை அளித்துள்ளது. ஓலா ஆண்டுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த ஸ்கூட்டர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
ஓலா இ-ஸ்கூட்டரின் விலை என்ன
ஓலா நிறுவனம் கடந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Ola Electric Scooter) இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியது-எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ. இவர்றின் விலை முறையே ரூ .99,999 மற்றும் ரூ .1,29,999 ஆகும் (எக்ஸ்-ஷோரூம் ஃபேம் II மானியம் மற்றும் மாநில மானியங்கள் தவிர).
ALSO READ: Ola Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR