ஒகினாவா ஆட்டோடெக் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. Okhi 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
ஒகினாவோ ஸ்கூட்டர் நிறுவனத்தின் பிற மின்சார வாகங்களை விட, சிறப்பான அம்சங்களை கொண்ட நவீன மாடல் ஸ்கூட்டர் இது.
குறிப்பாக ஓட்டுநர் வரம்பு மற்றும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும். Okhi 100 என பெயரிடப்பட்ட மோட்டார் சைக்கிள் இனி, அனைவரின் வாயிலும் ஒலிக்கும் ஸ்கூட்டர் பெயராகஇருக்கும்.
இரு சக்கர வாகனப் பிரிவில் மற்றொரு EV ஐ அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Okhi 90 மற்றும் Okhi 100 பற்றிய விவரங்களை, ஜீ மீடியாவுடனான பேட்டியில் ஒகினாவா ஆட்டோடெக்கின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ஜீதேந்தர் ஷர்மா தெரிவித்தார்.
Okhi 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Okhi 100 மின்சார பைக் அடுத்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூன்-ஜூலை 2022) அறிமுகப்படுத்தப்படும்.
ஓகி 90 வரம்பு
வரவிருக்கும் EVகளின் வரம்பு மற்றும் வேகம் பற்றிய சில விவரங்களையும் ஷர்மா பகிர்ந்துள்ளார். ஓகி 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு சுமார் 80 முதல் 90 கிலோமீட்டர் வரை இருக்கும், மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால்,170 கிமீ முதல் 200 கிமீ வரை ஓடும் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டர், இந்தியாவில் EV பிரிவின் சந்தை சூழ்நிலையை மாற்றும் என்றும், எதிர்காலத்திற்கு உரிய பல அம்சங்களைக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் இது என்றும் ஒகினாவா ஆடோடெக் கூறுகிறது.
ஓகி 90 சார்ஜிங்
Okhi 90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வரும். தற்போது, அனைத்து ஒகினாவா ஆட்டோடெக் வாகனங்களிலும் வேகமாக சார்ஜிங் செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வழங்குகின்றன. Okhi 90 முதல் ஒரு மணி நேரத்தில் 70 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும்.
வரவிருக்கும் தயாரிப்பு மிகவும் முன்னேறிய மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். “செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் இணைக்கப்பட்ட வாகன அம்சங்களை கொண்டிருக்கும். வரம்பின் அடிப்படையில் ICE இன்ஜின்களுடன் ஒப்பிடக்கூடிய ஒரு தயாரிப்பை நுகர்வோர் தேடுகின்றனர், இது அவர்களுக்கான தயாரிப்பு" என்று ஷர்மா தெரிவித்தார்.
“தற்போது எங்கள் தயாரிப்பு, சுமார் 139 கிமீ முதல் 140 கிமீ வரை வரம்பை வழங்குகிறது. புதிய Okhi 90 தயாரிப்பு அதை விட அதிகமான வரம்பை வழங்கும்.
மேலும் படிக்க | நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்
பேட்டரி ஸ்வாப்பிங்
பேட்டரி ஸ்வாப்பிங்கைப் பொறுத்தவரை, சர்மா கூறுகையில், பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை ஒட்டுமொத்த EV தொழில் வளர்ச்சிக்கு உதவும், இது ஒகினாவாவூக்கும் பொருந்தும். தற்போதைய ஒகினாவா தயாரிப்புகள் அனைத்தும் பிரிக்கக்கூடிய பேட்டரிகளைக் கொண்டுள்ளன. நீங்கள் பேட்டரியை வெளியே எடுக்கலாம் மற்றும் மொபைலை சார்ஜ் செய்வது போல் எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம்.
சார்ஜிங் செய்வதற்கு, நிறுவனம் ஸ்வாப்பிங் ஸ்டேஷனை உருவாக்குகிறதா அல்லது மூன்றாம் தரப்பைச் செய்கிறதா என்பதைப் பொறுத்தது. மூன்றாம் தரப்பினர் ஸ்வாப்பிங் ஸ்டேஷனை உருவாக்கினால், பேட்டரி ஃபார்ம் காரணி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். OEM கள் பொதுவான பேட்டரி வடிவ காரணியை உருவாக்க சிறிது நேரம் எடுக்கும்."
“Okhi 90 மற்றும் Okhi 100 ஆகியவை இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பார்வையை மாற்றப் போகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். வெளியீட்டின் போது நீங்களும் அதை புரிந்துக் கொள்வீர்கள் என்று சர்மா கூறுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR