நிலவில் கலங்கரை விளக்கத்தை அமைக்க நாசா முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம், விண்வெளி வீரர்கள் மற்றும் ரோபோக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. நிலவில் களங்கம் இருக்கும், ஆனால் கலங்கரை விளக்கம் இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. கலங்கரை விளக்கத்தை நிலவில் உருவாக்குவதன் முக்கியமான நோக்கத்தையும் காரணங்களையும் அடுக்கிறது நாசா.
நவீன தொழில்நுட்பம்
நாசா விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப முன்னெடுப்பு, சந்திரனில் ஒரு 'கலங்கரை விளக்கமாக' செயல்படும் மற்றும் விண்வெளி வீரர்கள் மற்றும் ரோபோட்டிக் எக்ஸ்ப்ளோரர்களின் நிகழ்நேர தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நிலவை ஆய்வு செய்யவுள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் ரோபோக்களுக்கு வழிகாட்டும் வகையில் சந்திரனின் மேற்பரப்பில் கலங்கரை விளக்கத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது நாசா.
மேலும் படிக்க | மின்சார கார்களுக்கு உலக அளவில் குறையும் மவுசு! தெளிவாய் காரணங்களை அடுக்கும் ஆய்வு!
நாசா விஞ்ஞானிகள் நிலவில் ஒரு 'கலங்கரை விளக்கமாக' செயல்படும் தொழில்நுட்பத்தை சோதித்து, விண்வெளி வீரர்கள் மற்றும் ரோபோ எக்ஸ்ப்ளோரர்களின் நிகழ்நேர தரவுகளை அவர்களுக்கு வழங்குவார்கள். இது விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்.
For 30 total minutes in February, @NASA lit a beacon on the Moon!
NASA’s Lunar Node-1 experiment successfully demonstrated a new navigation and positioning system that will change how we explore the Moon.
More on this #NASAMarshall tech HERE >> https://t.co/ohWfdnjiHN pic.twitter.com/tkG5qpwrTr
— NASA Marshall (@NASA_Marshall) March 14, 2024
விண்வெளி ஏஜென்சியான நாசாவின் கூற்றுப்படி, விஞ்ஞானிகள் ஒடிஸியஸில் லூனார் நோட் 1 (எல்என் -1) ((LN-1)) எனப்படும் தன்னாட்சி வழிசெலுத்தல் அமைப்பை (autonomous navigation system) வெற்றிகரமாக சோதித்தனர். இது பிப்ரவரி 22 அன்று நிலவின் தென் துருவத்தைத் தொட்ட இயந்திரங்களின் லேண்டர் ஆகும்.
நாசாவின் கூற்றுப்படி, ஒடிஸியஸில் சோதனை செய்யப்பட்ட இந்த அமைப்பு, சந்திரனில் உள்ள சுற்றுப்பாதைகள், தரையிறங்குபவர்கள் மற்றும் விண்வெளி வீரர்களை இணைக்கும் என்றும், பிற தரை நிலையங்கள், நெட்வொர்க் செய்யப்பட்ட விண்கலங்கள் மற்றும் ரோவர்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆய்வாளரின் நிலையை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ