Apple iPhone 14: பிளிப்கார்ட்டில் நம்ப முடியாத தள்ளுபடி , முந்துங்கள்!!

Apple iPhone Discount: ஐபோன் 14-க்கு பயனர்களுக்கு மத்தியில் அதிக தேவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலாக இருப்பது தவிர, இதில் பல வித நல்ல அம்சங்களும் உள்ளன. ஆகையால் மக்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2023, 01:13 PM IST
  • வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை மாற்றிக்கொண்டால், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெற முடியும்.
  • அதன் பிறகு இந்த போனை வாங்க, வெறும் ரூ. 46,999 செலுத்தினால் போதும்.
  • இது ஐபோனுகு மிகக்குறைந்த விலையாகும்.
Apple iPhone 14: பிளிப்கார்ட்டில் நம்ப முடியாத தள்ளுபடி , முந்துங்கள்!! title=

ஆப்பிள் ஐபோன் தள்ளுபடி: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு மாஸ் செய்தி!! ஐபோன் தொடரில் சமீபத்திய பதிப்பாக இருப்பதால், ஐபோன் 14-க்கு பயனர்களுக்கு மத்தியில் அதிக தேவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலாக இருப்பது தவிர, இதில் பல வித நல்ல அம்சங்களும் உள்ளன. ஆகையால் மக்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும், இதன் விலை காரணமாக பலரால் இதை வாங்க முடிவதில்லை.

ஐபோன் 14 வாங்கும் ஆசை இருந்து, அதன் விலை காரணமாக தயக்கத்தில் உள்ளவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 வாங்குவதற்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகப்பெரிய சலுகையாக உள்ளது. உங்களுக்கும் இந்த ஐபோன் மாடலை வாங்கும் எண்ணம் இருந்தால், முதலில் இந்த தள்ளுபடி சலுகையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மாடலில் கிடைக்கும் தள்ளுபடி எவ்வளவு

iPhone 14 இன் 128GB மாறுபாட்டிற்கு, வாடிக்கையாளர்கள் பட்டியலிடப்பட்ட விலையான ரூ. 66,999 செலுத்த வேண்டும். இதன் அசல் விலை ரூ. 79,900 ஆகும். எனினும், இதில் ஏற்கனவே பிளிப்கார்ட் 16% தள்ளுபடியை வழங்குகிறது. ஆகையால், வாடிக்கையாளர்களுக்கு விலையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பிளிப்கார்ட் தள்ளுபடி காரணமாக வாடிக்கையாளர்கள் இந்த மாடலை வாங்கும்போது, ​​அவர்கள் ரூ. 66,999 செலுத்தினால் போதும். ஐபோனுக்கான விலையை ஒப்பிடுகையில் இது மிகவும் மலிவான விலையாகும். 

மேலும் படிக்க | Microsoft Edge யூஸ் பணறீங்களா? அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!

எனினும், கண்டிப்பாக இந்த தொகையை தான் செலுத்த வேண்டுமா என வாடிக்கையாளர்கள் நினைத்தால், அது அவ்வாறு இல்லை. நீங்கள் விரும்பினால், இன்னும் அதிகமாக இதில் சேமிக்கலாம். அதற்காக நிறுவனம் மற்றொரு சலுகையை வழங்குகிறது.

பிளிப்கார்ட்டில் iPhone 14 இன் 128GB மாறுபாட்டை வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. எனினும், உங்களிடம் பழைய போன் இருந்து, அதை நீங்கள் பரிமாற்றிக்கொள்ள முன்வந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். 

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை மாற்றிக்கொண்டால், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெற முடியும். அதன் பிறகு இந்த போனை வாங்க, வெறும் ரூ. 46,999 செலுத்தினால் போதும். இது ஐபோனுகு மிகக்குறைந்த விலையாகும். இந்த தள்ளுபடி சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆகையால் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், அதை தாமதிக்காமல் உடனடியாக செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | வெயில் காலம் வந்தாச்சி!! இனி ஏசி/கூலர் ஓடும்..ஆனா பில் வரவே வராது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News