வெறும் ரூ. 12,700 -க்கு Apple iPhone 11: பிளிப்கார்ட்டில் ரூ. 31,200 அதிரடி தள்ளுபடி

iPhone 11 Sale in Flipkart: ஆப்பிள் ஐபோன் 11 -க்கு தற்போது பிளிப்கார்ட் விற்பனையில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 10:41 AM IST
  • ஆப்பிள் ஐபோன் 11 2019 இல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது இன்றுவரை அதிகம் விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும்.
  • மற்ற ரூ.15,000 ரெஞ்ச் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இது சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
வெறும் ரூ. 12,700 -க்கு Apple iPhone 11: பிளிப்கார்ட்டில் ரூ. 31,200 அதிரடி தள்ளுபடி title=

ஆப்பிள் ஐபோன் 11 2019 ஆம் ஆண்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இன்றுவரை அதிக விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்த வகையிலான ஃப்ளாக்‌ஷிப் ஆப்பிள் ஐபோன் மாடல்களில் ஐபோன் 11 கடைசி மாடலாகும். இது வளைந்த விளிம்புகளையும் (கர்வ்ட் எட்ஜெஸ்) அசத்தலான அம்சங்களையும் கொண்டுள்ளது. 

இந்த ஆப்பிள் ஐபோன் 11 -க்கு தற்போது பிளிப்கார்ட் விற்பனையில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 ஐ ஒப்பிடும்போது ஆப்பிள் ஐபோன் 11 பழையதாக இருக்கலாம், ஆனால் பட்ஜெட் பிரிவில் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்தியாவில் ஆப்பிளின் புதிய அதிகாரப்பூர்வ கடைகள் ஆப்பிள் ஐபோன் 11 ஐ விற்கவில்லை என்றாலும், இது இன்னும் இணையவழி தளங்களில் கிடைக்கிறது. அதுவும் எப்போதும் இல்லாத குறைந்த விலையில் ஐபோன் 11 இப்போது கிடைக்கின்றது. ஆப்பிள் ஐபோன் 11 2019 இல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இன்றுவரை அதிக விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாக உள்ளது. 

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 5ஜியின் விற்பனைக்கு இது பாதிப்புகளை ஏற்படுத்தியதால், நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் 11 -இன் விற்பனையை நிறுத்தியது. பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.31,200 தள்ளுபடிக்குப் பிறகு ஆப்பிள் ஐபோன் தற்போது வெறும் ரூ.12,700க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | Tech Tips: இணைய வேகத்தை இரு மடங்காக்க சில டிப்ஸ்!

ஆப்பிள் ஐபோன் 11 2019 இல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இன்றுவரை அதிகம் விற்பனையான ஐபோன் மாடல்களில் ஒன்றாகும். மற்ற ரூ.15,000 ரெஞ்ச் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இது சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 11 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஹூட்டின் கீழ் இது A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது பின்புறத்தில் டூயல் 12எம்பி சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 12எம்பி செல்ஃபி ஷூட்டர்ஆகியவற்றை கொண்டுள்ளது.

சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 11 ரூ.2,901 விலைக் குறைப்புக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.40,999க்கு விற்கப்படுகிறது. அதோடு, வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.38,950 ஆகக் குறைக்கப்படுகிறது. 

இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் அளித்தால், அதற்கு பதிலாக பிளிப்கார்ட் ரூ.26,250 வரை தள்ளுபடி வழங்குகிறது. அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், ஆப்பிள் ஐபோன் 11 பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.31,200 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் 12,700 ரூபாய்க்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க | Nokia 105 4G: நல்ல பேக்அப் போன் வேண்டுமா? குறைந்த விலையில் இதுதான் சரியான சாய்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News