மாருதி சுசுகி இந்தியாவில் புதிய மாடல் பிரெஸ்ஸாவை இன்று (ஜூன் 30) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியா மாதிரியான மிகப்பெரிய கார் சந்தையில் ப்ரெஸ்ஸா மிக முக்கியமான மற்றும் பிரீமியம் அறிமுகம் ஆகும்.
இதற்கு முந்தைய தலைமுறை விட்டாரா ப்ரெஸ்ஸா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUV வகை கார்களுள் ஒன்று. ப்ரெஸ்ஸா மாடல் கார்கள் சிக்கனமான எஞ்சின் மற்றும் நல்ல கேபின் இடம் ஆகியவற்றுக்காக அறியப்பட்டது. ஆனால் புதிய தயாரிப்புகளான Tata Nexon மற்றும் Kia Sonet போன்றவற்றிற்கு எதிராக அதன் திறனை இழந்து வந்தது. இதற்காக புத்துணர்ச்சியூட்டப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவை மீண்டும் களமிறக்கியுள்ளது சுசுகி. எனவே, 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா ஜூன் 30 அன்று (இன்று) அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா - வெளிப்புறம்
பொதுவாக புதுப்பிக்கப்பட்ட மாடல் கார்கள் அதன் முந்தைய மாடல்களில் இருந்து பல மாற்றங்களை கொண்டிருக்கும். அதே போல ப்ரெஸ்ஸாவிலும் மெல்லிய தோற்றமுடைய LED ஹெட்லேம்ப்கள். முன்பக்க பம்பரில் Bull Bar, பக்கவாட்டில் புதிய அலாய் வீல்களின் தொகுப்பு, பின்புற கண்ணாடி அளவு அதிகரிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் கூரையின் தோற்றம் எஸ்யூவியை பிரீமியமாக தோற்றமளிக்க வைக்கிறது. பின்பக்கத்தில் புதிய வடிவிலான டெயில் லைட் மற்றும் மடிக்கப்பட்ட வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், புதுப்பிக்கப்பட்ட மாடல் அதன் முந்தைய மாடலை விட சிறப்பானதாகவே இருக்கிறது.
மேலும் படிக்க | லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய வாகனங்களின் பட்டியல்
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா - உட்புறம்
புதிய மாருதி சுசுகி ப்ரெஸ்ஸா 9.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டைக் கொண்டிருக்கும் வகையில் டேஷ்போர்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏசி வென்ட்கள் டேஷ்போர்டின் கீழே நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. Facelift செய்யப்பட்ட மாடலிலும் புதிய வகை இருக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ப்ரெஸ்ஸாவின் முந்தைய மாடல்களில் இருந்து டார்க் தீமை இந்த மாடல் தன்னுடன் கொண்டு வந்திருக்கிறது.
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா - அம்சங்கள்
புதுப்பிக்கப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸாவில் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த பட்டியலில் எலக்ட்ரானிக் சன்ரூஃப், பெரிய 9.0 இன்ச் SmartPlay Pro இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் பல இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பிரீமியம் ஒலி அமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.
மேலும் படிக்க | Tyre Design New Rule: வாகனங்களில் இனி புதிய டயர் தான்: காரணம் என்ன
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா - விவரக்குறிப்புகள்
1.5லி இயற்கையான-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மோட்டார் 2022 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவை இயக்கும். புதிய ப்ரெஸ்ஸா 103 bhp மற்றும் 136.8 Nm அதிகபட்ச முறுக்குவிசையின் உச்ச ஆற்றலை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் 6-ஸ்பீடு AT மற்றும் 6-ஸ்பீடு MT ஆகியவை அடங்கும். பரிமாண ரீதியாக முந்தைய காரில் இருக்கும் பல விஷயங்கள் மாறாமல் இருக்கும். இருப்பினும், அகலம் மற்றும் உயரத்தில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா - விலை
அறிமுகப்படுத்தப்பட்டதும், இது Kia Sonet, Tata Nexon, Hyundai Venue, Nissan Magnite, Renault Kiger மற்றும் Mahindra XUV300 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். 2022 விட்டாரா பிரெஸ்ஸா சுமார் ரூ.7.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR