Automatic Smartphone: ஆண்டிராய்டு போனை ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட்போனாக மாற்றலாம்! சிம்பிள் டிப்ஸ்

உங்கள் கைகளில் இருக்கும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை, சிம்பிள் டிப்ஸ் மூலம் ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட்போனாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2022, 06:31 AM IST
  • ஆன்டிராய்டு போனை ஆட்டோமேடிக் போனாக மாற்றுங்கள்
  • கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலி உங்களுக்கு உதவும்
  • ஒரே ஒரு செயலி மூலம் ஸ்மார்ட்டாக மாறும் ஸ்மார்ட்போன்
Automatic Smartphone: ஆண்டிராய்டு போனை ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட்போனாக மாற்றலாம்! சிம்பிள் டிப்ஸ் title=

Smartphone Voice Command App: நம்மை சுற்றியிருக்கும் தொழில்நுட்ப உலகத்தை நீங்கள் அலசி ஆராய்ந்தால், இதுவரை கேள்விப்படாத பல புதுமையான விஷயங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பிரம்மிக்க வைக்கும். கனவில் கூட நினைக்காத பல விஷயங்களை சாதாரணமாக செய்யும் தொழில்நுட்பங்கள், செயலி வடிவில் எளிமையாக கிடைக்கின்றன. ஆனால், அவற்றை பற்றிய செய்திகளை நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. மிகவும் கடினமாக செய்யும் சில விஷயங்களை, ஒரே ஒரு செயலி மிக மிக எளிமையாக செய்துவிடும். 

அந்தவகையில், உங்கள் ஸ்மார்ட்போனை ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட்போனாக மாற்ற முடியும். உங்கள் வாய்ஸ் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை இயக்கிக்கொள்ளலாம். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இது சாத்தியம். இப்போதே நீங்கள் முயற்சித்துக்கூட பார்க்கலாம். உங்களின் ஏவலாளியாக செயல்பட்டு ஸ்மார்ட்போனை நிர்வகிக்கும் ஒரு செயலியைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். நீங்கள் பேசுவதன் மூலம் வீடியோக்கள் இயக்கப்படும். நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஒரே ஒரு கட்டளை மூலம் அழைக்க முடியும். இந்த சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | iPhone 14 Launch Offers: ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 14-க்கு காஷ்பேக் ஆஃபர் இவ்வளவா?

ஸ்மார்ட்போன் செயலி 

Voice Command App. இந்த செயலியை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. இதுவரை பயன்படுத்தவில்லை என்றால் அல்லது தெரிந்திருக்கவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் ஏவலாளியாக செயல்பட்டு அனைத்து வேலைகளையும் செய்யும். இந்த ஆப் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கட்டுப்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. உங்கள் குரல் மூலம் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் வசதியை வழங்குகிறது. தொலைபேசியைத் தொடாமலேயே அனைத்து வேலைகளையும் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதிக நேர நெருக்கடி உள்ளவர்களுக்கு இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும்.

அம்சங்கள் என்ன?

இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டுடன் பேசலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எந்த பயன்பாட்டையும் உடனடியாக நீங்கள் அணுகலாம். அதுவும் குரல் கட்டளையின் உதவியுடன். யூசர்கள் இந்த செயலியின் உதவியுடன் பயன்பாட்டுத் திரைக்கு உடனடியாக செல்ல முடியும். ஸ்க்ரோல் செய்யவும் முடியும். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் Google Play Store-க்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Apple iPhone 14, iPhone 14 Plus அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News