Mid-Range SUV: மே 2024 - விற்பனையின் டாப்பில் Mahindra... ஒரு கார் கூட விற்காத Citroen

Mid-Range SUV Car Sales: 4.4 மீட்டர் - 4.7 மீட்டர் அளவு நீளம் கொண்ட கார்களின் கடந்த மே மாத விற்பனை நிலவரத்தையும், டாப் 10 கார்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 22, 2024, 02:17 PM IST
  • இதில் Mahindra நிறுவனம் முன்னணி வகிக்கிறது.
  • Mahindra Scorpio/N கார் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • Citroen C5 Aircross ஒரு யூனிட் கூட விற்கவில்லை.
Mid-Range SUV: மே 2024 - விற்பனையின் டாப்பில் Mahindra... ஒரு கார் கூட விற்காத Citroen title=

Mid-Range SUV Car Sales In May 2024: கார் வாங்குவது என முடிவு செய்துவிட்டால் எந்த மாடல் கார் வாங்குவது, எந்த பட்ஜெட்டில் எந்த அளவில் கார் வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் முடிவு செய்தாக வேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப சந்தையில் பல கார்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட ஒன்றை தேர்வு செய்வது என்பது சற்று கடினமானதுதான். 

இருப்பினும் ஒவ்வொரு மாதத்தின் கார் விற்பனை நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எந்த மாடல்கள் கார்கள் அதிக விற்பனையாகிறது, அதுவும் குறிப்பிட்ட அளவில் உள்ள கார்களில் எந்தெந்த மாடல்கள் அதிகம் விற்பனையாகிறது என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் எந்தெந்த கார்கள் அதிகம் விற்பனையாகின்றன, மக்கள் எதை அதிகம் வாங்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

2.60% வளர்ச்சி

அந்த வகையில், இங்கு நடுத்தர அளவிலான SUV கார்களில் இந்த மே மாதம் விற்பனை நிலவரத்தை இதில் காண்போம். நடுத்தர அளவிலான SUV கார்கள் என்றால் அவை 4.4 மீட்டர் - 4.7 மீட்டர் அளவு வரை நீளத்துடன் இருக்கும். இந்த வகையில் டாப் 10 காரின் மே 2024 விற்பனை விவரத்தை இங்கு காணலாம். இதில் மே 2023 விற்பனையையும் இங்கு ஒப்பிடலாம்.

மேலும் படிக்க | ரூ.13 ஆயிரம் தள்ளுபடி... முட்டி மோதும் இரண்டு OnePlus மொபைல்கள் - சபாஷ் சரியான போட்டி!

2024ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் மொத்தம் 25 ஆயிரத்து 400 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது 2023ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும் போது இந்தாண்டு 2.60% வளர்ச்சி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 24 ஆயிரத்து 757 யூனிட்களே விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2024 மே மாதம் அதிக விற்பனை செய்த டாப் 10 கார்களில் முதலிரண்டு கார்களை மஹிந்திரா கார்களே பெற்றுள்ளன. 

Mahindra Scorpio முதலிடம்

அதுவும் இந்த ரேஞ்சில் மஹிந்திரா நிறுவனத்தின் அந்த இரண்டு கார்களே மொத்த சந்தையில் 73% விற்பனையை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், Mahindra Scorpio / N கார் மட்டும் 54 சதவீத பங்களிப்புடன் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, இந்தாண்டு மே மாதத்தில் 13 ஆயிரத்து 717 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 9 ஆயிரத்து 318 யூனிட்களே விற்பனையான நிலையில், மொத்தம் 4,399 யூனிட்கள் விற்பனை அதிகமாகி உள்ளது. அதாவது வருடாந்திர வளர்ச்சி 47.21% ஆகும்.

Mahindra XUV700 கார்கள் 2024ஆம் ஆண்டு மே மாதம் 5008 யூனிட்களே விற்பனையாகி உளள நிலையில், கடந்தாண்டு மே மாதம் 5245 யூனிட்கள் விற்பனையாகின. அதாவது 237 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. MG Hector/Plus 1,906 யூனிட்கள், Tata Safari 1,661 யூனிட்கள், Tata Harrier 1,625 யூனிட்கள் என அடுத்தடுத்து விற்பனையில் 3வது, 4ஆவது, 5ஆவது இடத்தை பிடித்துள்ளன. 

பாவம் Citroen...!

Hyundai Alcazar 944 யூனிட்கள், Jeep Compass 269 யூனிட்கள், Hyundai Tucson 168 யூனிட்கள், Volkswagen Tiguan 102 யூனிட்கள், Citroen C5 Aircross ஒரு யூனிட்டை கூட விற்கவில்லை. இவை முறையே விற்பனையில் 6 முதல் 10ஆவது இடத்தை பிடிக்கிறது. 

மேலும் படிக்க | இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி... ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News