சந்தையில் குதித்திற்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் - ரூ.20 ஆயிரத்திற்கு குறைவான விலையில்...!

5G Smartphone March Release 2024: மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் புதிதாக களம் கண்டுள்ள மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2024, 06:50 PM IST
  • Lava நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளது.
  • 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் கிராக்கி உள்ளது.
  • Vivo, Realme நிறுவனங்களும் இம்மாதத்தில் புதிய ஸ்மார்ட்போனை கொண்டுவந்துள்ளன.
சந்தையில் குதித்திற்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் - ரூ.20 ஆயிரத்திற்கு குறைவான விலையில்...!  title=

5G Smartphone March Release 2024: ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு மாதமும், ஏன் ஒவ்வொரு வாரமும் புதுப் புது மாடல் விற்பனைக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரி எண்ணிக்கை தற்போது அதிகமாகிவிட்டது. அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க விரும்புவதால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்கள் மொபைல்கள் சந்தைகளில் அறிமுகமாகின்றன. 

குறிப்பாக, இந்தியாவில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகமாகி உள்ளது. 5ஜி சேவைகள் நாடு முழுவதும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களால் வரம்பற்ற வகையில் கொடுக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இந்திய சந்தைகளை குறிவைத்து பல்வேறு நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்த வகையில், இந்த வாரமும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த வாரம், பட்ஜெட் விலையில் இருந்து இடையிடப்பட்ட விலை வகை வரை சில ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில், Lava O2,  Vivo T3 5G, Realme Narzo 70 Pro 5G ஆகிய மொபைல்கள் முக்கியமானவை.

மேலும் படிக்க | உங்கள் ஃபோனை அப்டேட் செய்யாவிட்டால், காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

இதில், Lava O2 இந்த பட்டியலில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மொபைலாகும். மற்ற ஸ்மார்ட்போன்களும் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல்களின் சிறப்பம்சங்களை இதில் காணலாம். 

Lava O2

இது இந்தியாவில் மார்ச் 23 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் ஆரம்ப விலை 7 ஆயிரத்து 999 ஆகும், இதில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, 50MP AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 8MP கேமரா உள்ளது. போனின் பேட்டரி 5000mAh ஆகும்.

Vivo T3 5G

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 31 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை 17 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த மொபைல், 6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 7200 பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, இதில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கிய பின்புற இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5000mAh ஆகும், இதில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

Realme Narzo 70 Pro 5G 

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 19 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் ஆரம்ப விலை  18 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இந்த மொபல் 8ஜிபி RAM, 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வரும்.  இந்த மொபைல், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 7050 செயலி பொருத்தப்பட்டுள்ளது. 

இதில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 16MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பேட்டரி 5000mAh ஆகும். இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜியோ ஐபிஎல் ஆஃபர்! 49 ரூபாய் விலையில் ஐபிஎல் போட்டிகளை தடையில்லாமல் பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News