LinkedIn என்றால் என்ன?
லிங்க்ட்இன் என்பது தொழில் வல்லுநர்களுக்கான சமூக ஊடகத் தளமாகும். இது மக்கள் தங்கள் துறையை சேர்ந்தவர்களுடன் இணையவும், புதிய பணியாளர்களைத் தேடவும் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும். புதிய பணிக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் அல்லது தொழில் வல்லுநர்கள் சாத்தியமான நபர்களை நேரடியாக தளத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம்.
LinkedIn-ல் மோசடி
அடிக்கடி பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக லிங்க்ட்இன் இருப்பதால் ஸ்கேமர்கள் இந்த தளத்தை குறி வைத்திருக்கின்றனர். நம்பகத்தன்மையை பெற்ற தளமாக இருப்பதும் மற்றொரு காரணம். இதில் கனவுகளுடன் இருக்கும் இளைஞர்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் வேலையையும் அறிந்து கொள்ளலாம். ஆனால், அதில் யாரை தொடர்பு கொள்கிறோம் என்பதில் யூசர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதில் பொதுவாக நடைபெறும் மோசடிகளை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | இனி ஸ்டோரேஜ் GBயில் இல்லை TBயில்....புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்
1. கேட்ஃபிஷர்கள்
கேட்ஃபிஷிங் என்பது மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. மோசடி செய்பவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தனிப்பட்ட தகவல்களை திருடவும், பணத்தை பெறவும் ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். உதாரணமாக, ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ் போன்றவர்களுடன் தொடர்பு இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள். அல்லது அவர்களின் பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கி உங்களுடன் உரையாடுவார்கள்.
2. ஃபிஷிங் மோசடிகள்
நீங்கள் ஒரு வேலையைக் கண்டால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஒப்பந்தத்திற்கு உங்கள் வங்கி விவரங்கள் அல்லது சமூகப் பாதுகாப்பு எண் போன்ற தரவு தேவைப்படும். இதனை குறிவைத்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்காக மோசடி வேலை வாய்ப்பை உருவாக்கி, உங்களை இந்த தளம் மூலம் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.
3. போலி வேலை வாய்ப்புகள்
போலி வேலை வாய்ப்புகளை கொடுத்து, அதாவது ப்ரீலேன்சர் வாய்ப்பு கொடுப்பதாக கூறி உங்களிடம் இருந்து வேலையை பெற்றுக் கொண்டு பணத்தை கொடுக்கமாட்டார்கள். செய்த வேலைக்கான ஊதியம் கிடைக்காததால் நீங்கள் விரக்தியடையகூடும்.
4. தவறான லிங்குகள்
லிங்க்இன் தளத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறுவார்கள். மேலும், கவர்ச்சிகரமான ஆஃபர்கள், வேலைவாய்ப்புடன் லிங்கை அனுப்புவார்கள். இவற்றை கிளிக் செய்வதற்கு முன் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் ஸ்கேமர்கள் ஊடுருவி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள 5 புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ