Flipkart: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் அடிக்கடி பொருட்களை ஆர்டர் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான செய்திதான் இது. சமீபத்தில் Flipkart பற்றிய ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி கேள்விப்பட்ட வாடிக்கையாளர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Flipkart cancellation Charge
பிளிப்கார்ட் தளம் ஆர்டரை ரத்து செய்ய ரூ 20 வசூலிக்கிறது என்று ஒரு சமூக ஊடக இடுகை மூலம் தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். இது ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், ஆர்டர்களை கேன்சல் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதை பார்த்த பயனர்களுக்கு ஆச்சரியம் அதிகமாகியுள்ளதுடன் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.
Flipkart நிறுவனம் கூறுவது என்ன?
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த பிளிப்கார்ட் இந்தியா டுடேவிடம், கேன்சல் கட்டணம் புதிய விதி அல்ல என்றும் இந்த கொள்கை இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் கூறியுள்ளது. ஆர்டரை வழங்கிய 24 மணிநேரத்திற்குப் பிறகு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இது பொருந்தும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்படும் ஆர்டர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட அவகாசம் அளிக்கப்படுகின்றது.
ஒரு வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்யும் போது, பொருட்களை பேக்கிங் மற்றும் ஷிப்பிங் செய்வதில் ஏற்படும் செலவுகளால் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கிறது என்று Flipkart தெரிவித்துள்ளது. ஆகையால், ஆர்டர் செய்த 24 மணி நேரத்திற்குப் பிறகு வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்தால், அவரிடம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் என நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்யும்போது, விற்பனையாளருக்கும் டெலிவரி நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் கூறியது. ஏனெனில் அந்த நேரத்திற்குள் பொருட்களை பேக் செய்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர்கள். ஆகையால், வாடிக்கையாளரிடமிருந்து ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது இந்த இழப்பை ஈடுசெய்கிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், Flipkart இந்தக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது.
புதிய விதி எதுவும் இல்லை: பிளிப்கார்ட்
கேன்சல் செய்யப்பட்ட ஆர்டருக்கு பணம் வசூலிக்கப்படும் விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதி ஏற்கனவே இருந்தபோதிலும், பலருக்கு இது தெரியாது என நிறுவனம் கூறியுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இது புதிய விதி அல்ல என்றும், ஒரு வாடிக்கையாளர் ஒரு பொருளை ஆர்டர் செய்து, பின் அதை கேன்சல் செய்தால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த கட்டணம் நியாயமானது என பிளிப்கார்ட் கூறுகிறது.
மேலும் படிக்க | 84 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா இலவசம்! BSNL-ன் அசத்தல் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ