Made in India iPhone: தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி! குறைந்த விலையில் கிடைக்கும், விவரம் இதோ

iPhone 15: ஐபோன் 15 உற்பத்தி தமிழகத்தில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது. இந்த பெரிய பொறுப்பு Foxconn நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 06:45 AM IST
  • ஐபோன் 15 உற்பத்தி தமிழகத்தில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் விலையும் குறைவாகவே இருக்கும்.
  • இது பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.
Made in India iPhone: தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி! குறைந்த விலையில் கிடைக்கும், விவரம் இதோ title=

ஐபோன் 15 சீரிஸ்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அடுத்த மாதம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது. ஆனால் இதற்கு முன்னரே ஒரு பெரிய தகவல் முன்வந்துள்ளது. இதை அறிந்த பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமையுடன் விரிவடையும்.  ஐபோன் 15 உற்பத்தி தமிழகத்தில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது. இந்த பெரிய பொறுப்பு Foxconn நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இது ஒரு பெரிய படியாக இருக்கும். இதன் மூலம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் விலையும் குறைவாகவே இருக்கும். இது பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.

திட்டம் என்ன?

'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் 'ஐபோன் 15' ஐ தயாரிப்பிற்கு பிறகு, நிறுவனம் இப்போது அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. குறுகிய காலத்தில் மற்ற நாடுகளுக்கு 'ஐபோன் 15' வழங்குவதைத் தொடங்குவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். இந்தியாவில் உள்ள பிற ஆப்பிள் சப்ளையர்களான பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் (டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது) ஆகியவையும் 'ஐபோன் 15'  -ஐ அசெம்பிள் செய்வதற்கான வழிமுறையை விரைவில் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆப்பிள் இந்தியாவில் 'ஐபோன் 14' ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

டிம் குக் கூறியது என்ன?

2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவுகளின் போது, ​​குக், 'இந்தியாவில் எங்கள் புதிய கடைகளின் செயல்திறன் எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது' என்று கூறினார். 'ஜூன் காலாண்டில் நாங்கள் இந்தியாவில் வருவாய் சாதனை படைத்துள்ளோம்.' என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஐபோன் 15 தொடரில் என்ன மாற்றங்கள் இருக்கும்?

மியூட் ஸ்விட்ச் பட்டன் கிடைக்காது: 

புதிய ஐபோன் மாடலில் மியூட் ஸ்விட்ச் பட்டன் இருக்காது. ஐபோனில் உள்ள மியூட் ஸ்விட்ச்க்கு பதிலாக இம்முறை கஸ்டமைசேஷன் பட்டன் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இந்த பொத்தானைப் பயன்படுத்த முடியும் மற்றும் சிறப்புப் பணிகளுக்காகவும் இந்தப் பொத்தானை ஒதுக்க முடியும். இதன் மூலம், ஐபோன் இயங்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக மாறும்.

லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூஎஸ்பி-சி போர்ட் கிடைக்கும்: 

மிக முக்கியமான மாற்றங்களில், ஐபோன் 15 சீரிஸில் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக இந்த முறை யூஎஸ்பி சி போர்ட்டைக் காணலாம். இதன் மூலம், போன் வேகமாக சார்ஜ் ஆவது மட்டுமின்றி, ஐபோனின் பேட்டரியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க | அடேங்கப்பா... ஒரு மொபைலில் 24 GB RAM ஆ... கெத்தாக அறிவித்த Realme!

நாட்ச் அகற்றப்படும், டைனமிக் ஐலேண்ட் வரும்: 

ஐபோன் 14 தொடரில் பெரும்பாலான பயனர்கள் டைனமிக் ஐலேண்டில் விருப்பம் காட்டினார்கள். ஆகையால், நாட்ச்சுக்கு பதிலாக டைனமிக் ஐலேண்டு கொண்டு இந்த முறை புதுப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை ஐபோன் 15 இல் இருந்து நாட்ச் முற்றிலும் மறைந்துவிடும் என்பதற்கான காரணம் இதுதான்.

டிஸ்பிளேவில் பெரிய மாற்றம் இருக்கும்: 

தகவலின்படி, இந்த முறை ஐபோன் 15 தொடரில் 'ஆல்வேஸ் ஆன்' மற்றும் ப்ரோமோஷன் அம்சம் வரம்பிடப்படும். இந்த அம்சம் iPhone 15 Pro மற்றும் 15 Pro Max மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த முறை ஐபோன் 15 ப்ரோ அடர் நீல (டார்க் ப்ளூ) நிறத்தில் கிடைக்கும், இதில் கிரே டோனும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | விரைவில் Vivo V29e அறிமுகம்! செல்பி கேமரா 50 எம்பி - போட்டோ செம கிளியரா இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News