Flipkart Diwali Sale: iPhone 13-ல் இதுவரை இல்லாத பம்பர் தள்ளுபடி

iPhone 13 Offer Flipkart Diwali Sale: நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2022, 11:38 AM IST
  • பிளிப்கார்டில் அக்டோபர் 11, 2022 முதல் பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை (Flipkart Diwali Sale) தொடங்கி நடந்து வருகிறது.
  • இதில் iPhone 13 இல் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
  • அக்டோபர் 16, 2022 வரை நடைபெறும் இந்த விற்பனையின் மூலம், ஐபோன் 13 ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Flipkart Diwali Sale: iPhone 13-ல் இதுவரை இல்லாத பம்பர் தள்ளுபடி title=

iPhone 13 Offer Flipkart Diwali Sale: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 தொடரை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடரின் அறிமுகத்திற்குப் பிறகும், பல ஆப்பிள் ரசிகர்கள் அதன் ஐபோன் 13 போனை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். நீங்களும் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பிளிப்கார்டில் அக்டோபர் 11, 2022 முதல் பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை (Flipkart Diwali Sale) தொடங்கி நடந்து வருகிறது. இதில் iPhone 13 இல் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் 16, 2022 வரை நடைபெறும் இந்த விற்பனையின் மூலம், ஐபோன் 13 ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Flipkart தீபாவளி விற்பனையின் அதிரடி சலுகை 

ஐபோன் 13 இன் 128 ஜிபி சேமிப்பு மற்றும் பச்சை நிற மாறுபாடு பற்றி இங்கு பேசுகிறோம். ஐபோன் 14 அறிமுகத்திற்குப் பிறகு ஐபோன் 13, பிளிப்கார்ட்டில் ரூ.69,900க்கு விற்கப்படுகிறது. விற்பனையின் கீழ், இந்த போனின் விலை 14% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.59,990 ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்க | 5G: சிம் கார்டை 5ஜிக்கு மாற்றுவதில் நடைபெறும் மோசடி! உஷார் மக்களே 

iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!

59,990 ரூபாய்க்கு கிடைக்கும் ஐபோன் 13-ஐ, கூடுதல் சலுகைகளின் உதவியுடன் இன்னும் மலிவாகப் பெறலாம். எஸ்பிஐயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.2,250 சேமிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு ஐபோன் 13 இன் விலை ரூ.57,740 ஆக குறையும். பழைய போனுக்கு ஈடாக இதை, பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் வாங்கினால் ரூ.16,900 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13ஐ ரூ.40,840க்கு வாங்கலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்

இந்த டீலில் iPhone 13 இன் 128GB சேமிப்பு மாறுபாடு பற்றி பேசப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 5G சேவைகளுடன் கூடிய இந்த iPhone 13 ஆனது 6.1-inch Super Retina XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12MP மற்றும் முன் கேமராவும் 12MP ஆகும். இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.

மேலும் படிக்க | சாம்சங் ஃபோன் யூஸ் பண்றீங்களா... அப்போது இது உங்களுக்குத்தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News