மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஆன்லைனில் ப்ரைவசியை மேலும் பாதுகாக்க உங்கள் பிரைவசி கண்ட்ரோல் செட்டிங்கில் சில புதிய ஆப்ஷன்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளத்தில், இப்போது வாடிக்கையாளர்கள் அவர்களது ப்ரொபைல் போட்டோ மற்றும் லாஸ்ட் சீன் போன்றவற்றை அவர்கள் காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் எந்த நபர்கள் பார்க்கலாம், எந்த நபர்கள் பார்க்க வேண்டாம் என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள கூடிய ஒரு அசத்தலான அம்சத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | ஹேக்கர்களின் செயலிகள் உங்கள் போனில் இருக்கிறதா? உடனே டெலிட் செய்யுங்கள்
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம், "உங்களின் பாதுகாப்பு மற்றும் உங்கள் செய்திகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் நாங்கள் வடிவமைத்துள்ள கருவிகள் மற்றும் அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்று அதன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பயனர்கள் அவர்களின் லாஸ்ட் சீன், ப்ரொபைல் போட்டோ, அபவுட் அல்லது ஸ்டேட்டஸ் போன்றவற்றை பின்வரும் ஆப்ஷன்களை பயன்படுத்தி அமைத்துக்கொள்ளலாம். 'எவரிஒன்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் போட்டோ, அபவுட் அல்லது ஸ்டேட்டஸ் போன்றவை உங்கள் நம்பரை வைத்திருக்கும் அனைவர்க்கும் காட்டும். 'மை கான்டாக்ட்ஸ்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்கள் காண்டாக்ட்டில் உள்ள நபர்களுக்கு மட்டும் உங்களது லாஸ்ட் சீன், ப்ரொபைல் போட்டோ, அபவுட் அல்லது ஸ்டேட்டஸ் போன்றவை காட்டும். 'மை கான்டாக்ட்ஸ் எக்ஸப்ட்' ஆப்ஷனை தேர்வு செய்தால் யாருக்கு மட்டும் உங்களது லாஸ்ட் சீன், ப்ரொபைல் போட்டோ, அபவுட் அல்லது ஸ்டேட்டஸ் கட்டவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக 'நோபடி' என்கிற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தால் உங்களது லாஸ்ட் சீன், ப்ரொபைல் போட்டோ, அபவுட் அல்லது ஸ்டேட்டஸ் போன்றவைக்கு யாருக்கும் காட்டாது. மேலும் ஒருவருடன் நீங்கள் சாட் செய்யும்போது அனுப்பும் செய்திகள், புகைப்படம், வீடியோ, பைல்கள் அல்லது ஆடியோ மெசேஜ்கள் போன்றவை அவர்களிடம் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த நபர் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால் கவனமாக அனுப்புமாறு வாட்ஸ் அப் அதன் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR