Mahindra Thar: ஜூன் மாதம் அதிரடி தள்ளுபடிகள்: குஷியில் வாடிக்கையாளர்கள்

Mahindra Thar: மாருதி ஜிம்னிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பார்த்து இப்போது மஹிந்திரா பெரிய ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 20, 2023, 04:57 PM IST
  • மஹிந்திரா THAR -ல் அதிக தள்ளுபடி.
  • மஹிந்திரா நிறுவனம் தனது THAR -ல் ரூ. 40,000 ரொக்க தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது.
  • இது தவிர, இந்த காருக்கு ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது.
Mahindra Thar: ஜூன் மாதம் அதிரடி தள்ளுபடிகள்: குஷியில் வாடிக்கையாளர்கள் title=

ஜூன் மாதத்திற்கான மஹிந்திரா தார் தள்ளுபடி சலுகை: மஹிந்திரா & மஹிந்திரா தார் பிரியர்களுக்கு ஒரு பெரிய பணச் சலுகையை வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 40,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மேலும் இதில் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் மாருதி அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சக்திவாய்ந்த SUV மாருதி ஜிம்னியை அறிமுகம் செய்தது. இது இந்திய எஸ்யுவி சந்தையில் தாருக்கு கடுமையான போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. மாருதி ஜிம்னியின் விலை ரூ.12.47 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இதுமட்டுமின்றி, விலை வெளியான பிறகும் ஜிம்னிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மாருதி கூறியுள்ளது. 

மாருதி ஜிம்னிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவை பார்த்து இப்போது மஹிந்திரா பெரிய ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. மஹிந்திரா மிகவும் பிரபலமான, குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான தார் (THAR) மீது பெரும் பணத் தள்ளுபடியை வழங்கியுள்ளது.

மஹிந்திரா THAR மீது அதிக தள்ளுபடி

மஹிந்திரா நிறுவனம் தனது THAR மீது ரூ. 40,000 ரொக்க தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளது. இது தவிர, இந்த காருக்கு ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் THAR ஐ வாங்க திட்டமிட்டால், இந்த சலுகை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆஃபர் ஜூன் மாதத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? குறைந்த விலை, அதிக திறன் கொண்ட கார்கள் இவைதான்

மஹிந்திரா தாரில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? 

மஹிந்திரா தார் 4*4, 8 டிரிம்களில் கிடைக்கிறது. இதன் அடிப்படை மாறுபாட்டின் ஆரம்ப விலை ரூ.13.87 லட்சம் ஆகும். டாப் வேரியண்டின் விலை ரூ. 16.78 லட்சம் ஆகும் (எக்ஸ்-ஷோரூம் விலை). மஹிந்திரா தார் பற்றி பேசுகையில், இது 3 வெவ்வேறு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎஸ் பவரையும், 300-320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மறுபுறம், டீசல் மாறுபாட்டைப் பற்றி பேசுகையில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாறுபாடும் உள்ளது. இது 132 பிஎஸ் ஆற்றலையும் 300 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது.

கூடுதல் தகவல்

உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.  

- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- எப்போது கார் டயர்களை மாற்ற வேண்டும் என்பதை அவ்வப்போது கவனியுங்கள்

மேலும் படிக்க | Hyundai Exter vs Maruti Fronx: அம்சங்கள், விலை, வடிவமைப்பு.. முழு ஒப்பீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News