ரூ.3000 -க்கு ஆண்ட்ராய்டு போனை கொண்டுவர கூகிள் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள MWC 2018-ல் இந்த போனை குறித்த விற்பணை தகவல்கள் வெளியிட கூகிள் திட்டமிட்டுள்ளது.
இம்மாதம் பிப்.,26 துவங்கி மார்ச் 1 வரை "2018 Mobile World Congress" நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் தொழில்நுட்ப சந்தைப்படுத்தல் நிகழ்வில், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கேஜெட்ஸ்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸ் S9 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேப்போல் நோக்கியா நிறுவனம் கூகிள் வெர்ஸனில் இயங்ககூடிய ஆண்ட்ராய்ட் கோ-வினை அறிமுகப்படுத்த உள்ளது. 1GB RAM கொள்ளலவுடன் கூகிள் நிறுவனத்தின் சிறப்பம்சங்களுடன் வெளியாக காத்திருக்கிறது.
இந்த போட்டிகளுக்கு இடையில் கூகிள் நிறுவனமானது, சுமார் 3000ரூ மதிப்பீட்டிலான ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது. எனினும் இந்த போனின் சரியான விற்பனை விலையினை இதுவரை வெளியிடவில்லை, வரும் MWC 2018-ல் இந்த போனின் விலை மற்றும் மற்ற விவரங்களை வெளிபடுத்த கூகிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!