கிரிக்கெட் வெறியர்களுக்கு பம்பர் பிளான்... மாதம் 499 ரூபாய்க்கு அதிவேக அன்லிமிடெட் Wifi

World Cup Special Plan: உலகக் கோப்பை தொடரை நேரலையில் இலவசமாக தொலைக்காட்சியிலும் காண ஒரு இணைய சேவை நிறுவனம் சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2023, 11:37 AM IST
  • உலகக் கோப்பை வரை மட்டுமே இந்த திட்டம் இருக்கும்.
  • இந்த திட்டம் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.
  • உலகக் கோப்பை நவ. 19ஆம் தேதி நிறைவடைகிறது.
கிரிக்கெட் வெறியர்களுக்கு பம்பர் பிளான்... மாதம் 499 ரூபாய்க்கு அதிவேக அன்லிமிடெட் Wifi title=

World Cup Special Plan: ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் முழுவதையும் நீங்கள் உங்கள் மொபைலில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரலையில் இலவசமாக காணலாம். ஆனால், இதை மடிக்கணி, தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்றால் மாதம்/வருடச் சந்தா செலுத்தி தொடரை பார்க்கலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உலகக் கோப்பை சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் சேவையில், சில புதிய திட்டங்களை சமீப நாள்களுக்கு முன் அறிமுகப்படுத்தின என்பது நினைவுக்கூரத்தக்கது.

அதே நேரத்தில், இப்போது இந்தியாவின் வளர்ந்து வரும் இணைய சேவை வழங்குநரான Excitel என்ற நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக உலகக் கோப்பை சிறப்புத் திட்டத்தை (World Cup Special Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் என்னவென்றால், இது Excitel நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும்.

வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் பல நன்மைகளை வழங்கும் திட்டமாகவும் இது உள்ளது. குறிப்பாக, இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த திட்டம் ஒரு சிறப்பு சலுகையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே . புதிய திட்டத்தின் முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | உலகக் கோப்பையை இலவசமா பாருங்க - அதுவும் குறைவான டேட்டாவில்... இப்போ புது வசதியும் வந்துருக்கு!

Excitel உலகக் கோப்பை திட்டம்

Excitel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய உலகக் கோப்பை சிறப்பு திட்டத்தை (World Cup Special Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னர் கூறியது போல, இது நிறுவனத்தின் மிகவும் குறைவான விலையிலான திட்டமாகும். இதன் விலை மாதம் 499 ரூபாய்தான். இந்த திட்டத்தில், நீங்கள் 300Mbps அதிவேக அன்லிமிடெட் இணைய சேவையைப் பெறுவீர்கள். 

இது தவிர, இந்த திட்டம் 550க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, கிரிக்கெட் பிரியர்களுக்காக இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவையும் Excital வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், OTT செயலிக்கு சந்தா செலுத்தாமல் உங்கள் தொலைபேசியிலும், தொலைகாட்சியிலும் நேரடியாக உலகக் கோப்பை போட்டியை நீங்கள் அனுபவிக்க முடியும்.

நாங்கள் கூறியது போல், Excital நிறுவனத்தின் புதிய பிராட்பேண்ட் திட்டமான ரூ.499 சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டம் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையின் பலனைப் பெற முடியும்.

ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ நிறுவனம் சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வரும் சில உலகக் கோப்பை சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.ரூ.328, ரூ.388, ரூ.758, ரூ.808, ரூ.598 மற்றும் ரூ.3178 ஆகிய மதிப்பில் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ரூ.328 மற்றும் ரூ.288 திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன. இதில் முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதே நேரத்தில், 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் இரண்டு திட்டங்கள் உள்ளன. அதாவது, ரூ.758 மற்றும் ரூ.808 திட்டங்களில் முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த அனைத்து திட்டங்களிலும், ஜியோ 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. ரூ.598 மற்றும் ரூ.3178 திட்டங்கள் முறையே 28 நாட்கள் மற்றும் 265 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.

மேலும் படிக்க | அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News