EPFO Latest News: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது புதிய பல வசதிகளையும் விதிகளையும் அறிமுகம் செய்கிறது. இது தவிர ஏற்கனவே உள்ள வழிமுறைகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கவும் செயல்பாடுகளை எளிதாக்கவும் இவை செய்யப்படுகின்றன.
EPFO 3.0: எப்போது அறிமுகம்?
அந்த வகையில், சமீபத்தில் பல வித புதிய முயற்சிகளை இபிஎஃப்ஓ எடுத்துள்ளது. 2025 ஆண்டிலும் பல புதிய விதிகளும் வசதிகளும் அமலுக்கு வரவுள்ளன. அவற்றில் முக்கியமானவை இபிஎஃப் ஏடிஎம் கார்டுகள் (EPF ATM Card) மற்றும் இபிஎஃப்ஓ மொபைல் செயலி (EPFO App). EPFO அதன் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை அறிவித்துள்ளது. ஜூன் 2025 க்குள், EPFO அதன் மேம்பட்ட அமைப்பான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதார்ரக்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
EPFO 3.0 -இன் கீழ் பயனர் வசதியை மேம்படுத்த ஏடிஎம் கார்டுகள் மற்றும் மொபைல் செயலி போன்ற புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, நவீன வங்கி அமைப்புகளுக்கு இணையாக EPFO சேவைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்தார்.
EPFO 3.0: முக்கிய அம்சங்கள்
- PF ATM Cards: இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) விரைவில் ஏடிஎம் கார்டுகளைப் பெறுவார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்கள் இபிஎஃப் சேமிப்பு தொகையை விரைவாகவும் எளிதாகவும் எடுக்க முடியும். அவசரநிலைகள், திடீர் பண தேவைகள் அல்லது எதிர்பாராத செலவுகளுக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை திரும்பப் பெறுவது இனி எளிதாகிவிடும்.
- Improved Website Interface: மேம்படுத்தப்பட்ட இணையதள இடைமுகத்தின் நன்மையை இனி சந்தாதாரர்கள் அனுபவிக்கலாம். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மென்மையான வழிசெலுத்தலை உறுதிசெய்து, பயனர் நட்பு அனுபவத்தை வழங்க EPFO இணையதளம் புதுப்பிக்கப்படும்.
- EPFO App: இபிஎஃப் கணக்குகளுக்கான பிரத்யேக செயலி உருவாக்கப்படும். உறுப்பினர்களின் மாதாந்திர பங்களிப்புகள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் முந்தைய முதலாளிகளின் கடந்தகால பங்களிப்புகளை கண்காணிக்க இது உதவியாக இருக்கும்.
உறுப்பினர்கள் ATM கார்டுகளை எப்போது பயன்படுத்தலாம்?
2025 ஆம் ஆண்டுக்குள் உறுப்பினர்கள் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்று மத்திய தொழிலாளர் செயலாளர் சுமிதா தவ்ரா கூறினார். EPFO 2.0 -ஐத் தொடர்ந்து, EPFO 3.0 செயலி மே-ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த செயலி மூலம் வங்கி போன்ற வசதிகளைப் பெறுவார்கள்.
Withdrawal Limit: பிஎஃப் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி எவ்வளவு பணம் எடுக்கலாம்?
பிஎஃப் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி இபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வரம்பு 50% ஆக நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. எதிர்காலத்திற்கான நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் மொத்த இபிஎஃப் இருப்பில் (EPF Balance) 50% மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Employee Pension Scheme: ஓய்வூதிய பங்களிப்புகளில் நெகிழ்வுத்தன்மை
EPFO ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கான புதிய திட்டத்தையும் ஆராய்ந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர் பங்களிப்பிற்கான தற்போதைய 12% வரம்பு நீக்கப்படக்கூடும் என தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தற்போதைய 12% வரம்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும், பங்களிப்பை அதிககரிக்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச பங்களிப்பு 12% ஆகவே இருக்கும் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு வந்தவுடன்தான் இது தெளிவாகும்.
புதிய EPFO அமைப்பின் நன்மைகள் என்ன?
செயல்முறைகளை நெறிப்படுத்துதல், அணுகல் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் உறுப்பினர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய நிதியின் மீது அதிகக் கட்டுப்பாட்டை வழங்குதல் ஆகியவற்றை EPFO 3.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதுப்பிப்பு உள்நாட்டு மற்றும் சர்வதேச EPFO உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.
EPFO செயல்பாடுகளில் வங்கி செயமுறை போன்ற நவீன அனுபவம்
புதிய அமைப்பு EPFO சேவைகளை நவீன வங்கி அமைப்புகளின் நிலைக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக வசதிகள், வேகமான செயல்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ்? பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ