Psychology Tips To Become Insanely Attractive : சிலரை பார்க்கும்போது அவர்கள் இந்த சமூக கட்டமைப்புக்குள் வராத அழகு இல்லாதவர்களாக இருப்பார். ஆனால் அவர்களிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டே இருக்கும். இதனால் பிறர்க்கும் அவர்களை மிகவும் பிடிக்கும். இதற்கு காரணம் அவர்களது வெளிப்புற அழகு கிடையாது, உள்ளுக்குள் இருக்கும் அழகுதான். இப்படி நாமும் சில குணாதிசயங்களை வளர்த்துக் கொண்டால் வசீகரமாக இருக்கலாம்.
நன்றியறிதல்:
நம் வாழ்வில் கிடைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றியுடன் இருப்பது நல்ல பழக்கமாகும். இது, பிறருடன் நம்மை எளிதாக தொடர்பு படுத்திக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி நாம் உண்மையாகவே சில விஷயங்களுக்கு நன்றி உணர்வுடன் இருந்தால் நமக்கு மகிழ்ச்சியும் குறிப்பிடும். இந்த மகிழ்ச்சியை நம் வசீகரத்திற்கான காரணமாகவும் மாறும். இதனால் நீங்கள் ஏதும் செய்யாமலேயே பிறகு உங்களால் ஈர்க்கப்படுவர். உங்களுடன் உரையாடும் ஏதேனும் ஒரு வழிப்போக்கருக்கு கூட உங்களை மறக்க மாட்டார்.
அமைதி காத்தல்:
எந்த நிலையிலும், அனைத்து சூழலிலும் நீங்கள் அமைதி காத்தால் அது உங்களிடம் இருக்கும் மன தைரியத்தை வெளிக்காட்டுவதாக இருக்கும். இது பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் அரிதான குணாதிசயமாகும். அழுத்தம் ஏற்படும் சமயத்தில், அமைதி காப்பது உங்களது மன தைரியத்தையும் உணர்ச்சி ரீதியாக உங்களது வளர்ச்சியையும் காண்பிக்கும். இதனால் பலர் உங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நினைப்பர்.
கண் பார்த்து பேசுதல்:
பலர், ஒருவரின் வார்த்தையை நம்புவதை விட அவரது கண்களை நம்புவதை பழக்கமாகக் கொண்டிருக்கின்றன. கண்கள் தான் மனதில் திறவுகோல் என்பதை கேட்டிருப்போம். அந்த வகையில் நாம் கூறுவதில் நேர்மை இருந்தால் நாம் பிறரிடம் பேசும்போது கண்ணோடு கண் பார்த்துதான் பேசுவோம். அப்படி பேசுவது நீங்கள் எந்த அளவிற்கு ஒருவருக்கு மரியாதை கொடுக்கிறீர்கள் என்பதையும், அவர் கூறுவதை எப்படி உற்று நோக்கி கவனிக்கிறீர்கள் என்பதையும் காண்பிக்கும். இதனால் பிறர் உங்களை நம்பகமான ஆளாக பார்த்ததோடு மட்டுமின்றி வசீகரமான நபராகவும் கருத்துவர்.
உடல் மொழி:
நீங்கள் எப்படி உங்களை நடத்துகிறீர்கள் அல்லது ஒரு இடத்தில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காண்பிக்கும். உங்கள் தோள்களை நேராக வைத்திருப்பது, பிறருடன் தோழமைக்கான அறிகுறிகள் உடல் மொழிகளை வைத்துக் கொள்வது உங்களைப் பற்றி கூறும். உண்மையாக ஒருவரை பார்த்து புன்முறுவல் செய்தல், உங்களை எந்த அணிகலன்களும் இல்லாமல் அழகாக காண்பிப்போம். அது மட்டுமின்றி, சிறப்பான உடல் மொழி நீங்கள் தைரியமானவர் என்பதையும் பிறர் உங்களிடம் சௌகரியமாக இருக்கலாம் என்பதையும் காண்பிக்கும்.
குறைகளை ஏற்றுக்கொள்ளுதல்:
நீங்கள் உங்களிடம் இருக்கும் குறைகளை இரு கரங்களைத் திறந்து வரவேற்றால் அது உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையை காண்பிக்கிறது என்று அர்த்தம். இதுதான் பிறருக்கும் “குறைகள் அற்ற ஒருவர் இந்த உலகில் இல்லை” என்பதையும் உணர்த்தும். இது உணர்ச்சி ரீதியாக பிறருடன் தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடிய உணர்வாகும். அது மட்டுமின்றி நீங்கள் உங்கள் குறைகளை ஏற்றுக்கொள்வது, நீங்கள் உங்களை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் உங்களையும் காணோம். இது ஒரு வசீகரமான குணமாகும்.
மேலும் படிக்க | எந்த விவாதத்தையும் எளிதில் வெல்லலாம்! ஈசியான டிப்ஸ்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ