Flipkart Super Value Days Sale இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகை

Flipkart Super Value Days Sale: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2024, 01:36 PM IST
  • புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா?
  • உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
  • ஃபிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் சேலில் ஸ்மார்ட்ஃபோன்களில் சிறந்த டீல்கள் இப்போது கிடைக்கின்றன.
Flipkart Super Value Days Sale இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகை title=

Flipkart Super Value Days Sale: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஃபிளிப்கார்ட் சூப்பர் வேல்யூ டேஸ் சேலில் ஸ்மார்ட்ஃபோன்களில் சிறந்த டீல்கள் இப்போது கிடைக்கின்றன. புதிய ஃபோனை வாங்க நினைத்திருக்கும் அனைவருக்கும் இது மிக நல்ல வாய்ப்பாக இருக்கும். பல வித சலுகைகளை அளிக்கும் Flipkart வாடிக்கையாளர்களுக்காக தற்போது மற்றொரு பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. 

Flipkarrt Sale

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மீண்டும் சூப்பர் வேல்யூ டேஸ் என்ற புதிய விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விற்பனை இன்று அதாவது டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை லைவாக இருக்கும். இந்த விற்பனையின் போது, ​​சாம்சங் மற்றும் பல பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய 5 ஸ்மார்ட்போன்களில் அதிகபட்ச தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த சேலில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

SAMSUNG Galaxy S23 FE: சாம்சங் கேலக்சி எஸ்23 எஃப்இ

Flipkart இன் சூப்பர் வேல்யூ டேஸ் விற்பனையில் SAMSUNG Galaxy S23 FE மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. இந்த போன் பாதி விலையில் விற்பனையில் கிடைக்கிறது. விற்பனையின் மூலம் ரூ. 34,999 க்கு இந்த போனை வாங்கலாம். இதன் உண்மையான விலை ரூ.79,999 ஆகும்.

Google Pixel 8a: கூகுள் பிக்சல் 8a

பிளிப்கார்ட் விற்பனையில் கூகுள் போன்களும் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. நிறுவனம் இந்த போனை 52,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. எனினும், இப்போது வாடிக்கையாளர்கள் இந்த போனை வெறும் 36,999 ரூபாய்க்கு வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் தொலைபேசியில் கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | BSNL | இனி எங்க காலம்! ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிஎஸ்என்எல்

CMF by Nothing Phone 1: நத்திங் ஃபோன் 1

விற்பனையில் CMF by Nothing Phone 1 மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. நிறுவனம் இதை ரூ 19,999 க்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் இதை வெறும் ரூ 14,999 க்கு வாங்கலாம். HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலமாகவும் ரூ.2000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

Motorola Edge 50 Pro 5G: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் ரூ.10,000 குறைந்த விலையில் கிடைக்கும். விற்பனையில் உள்ள இந்த போனின் விலை ரூ.31,999 ஆக உள்ளது. நிறுவனம் இதை ரூ.41,999க்கு அறிமுகப்படுத்தியது. ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஐடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் போனில் ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.

REDMI 13C 5G: ரெட்மி 13சி 5ஜி

இந்த பட்டியலில் உள்ள கடைசி தொலைபேசி REDMI 13C 5G. இது இந்த சேலில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கலாம். தற்போது இந்த போனின் விலை ரூ.9,199 ஆக உள்ளது.

மேலும் படிக்க | Amazon Sale: ஸ்மார்ட்வாட்ச் விலைகளில் 83% வரை தள்ளுபடி, எக்கச்சக்க சலுகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News