பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்க உள்ளது. இந்த விற்பனையில், பிரபல பிராண்டான Poco இன் சமீபத்திய ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனையில், நிறுவனத்தின் POCO X சீரிஸ், F சீரிஸ் மற்றும் M சீரிஸ் தொலைபேசியில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். இது தவிர, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் Poco போன்களை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். POCO ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இங்கே விரிவாக காண்போம்.
Flipkart Big Billion Day Sale 2022 இல், நீங்கள் Poco X4 Pro 5G ஃபோனை ரூ.13,999க்கு வாங்கலாம். இந்த போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும். Poco X4 Pro 5G ஆனது 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் Snapdragon 695 SoC செயலியைக் கொண்டுள்ளது. மேலும், இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Flipkart Sale: டாப் பிராண்ட் போன்களுக்கு பம்பர் தள்ளுபடி, அசத்தல் சலுகை
பிக் பில்லியன் விற்பனையில், Poco F4 5G போனில் ரூ.6000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை விற்பனையில் இருந்து 21,999க்கு வாங்கலாம். தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 4,500mAh பேட்டரி உள்ளது. அத்துடன் இது 67W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், இந்த போன் ரூ.3,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த போனை ரூ.9,749க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். Poco M4 5G ஆனது 50 மெகாபிக்சல் AI இரட்டை கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இது 5,000mAh இன் சக்திவாய்ந்த பேட்டரியைப் பெறுகிறது.
நிறுவனம் Poco M4 Pro 5G போனை 11,499க்கு விற்பனை செய்கிறது. இது 12,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அறிவோம். MediaTek Dimensity 810 SoC சிப்செட் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இது 33W சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Flipkart இன் பிக் பில்லியன் வருடத்தில் நீங்கள் Poco M5 ஐ MediaTek Helio G99 SoC உடன் 10,999 ரூபாய்க்கு வாங்கலாம். முன்னதாக இந்த கைபேசியை நிறுவனம் ரூ.12,499க்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ