Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!!

Jio Phone 5G: ஜியோவின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது. விலையுயர்ந்த போன்களில் உள்ள அம்சங்கள் இந்த மலிவான போனில் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2022, 10:41 AM IST
  • சர்டிஃபிகேஷன் இணையதளத்தில், மாடல் எண் LS1654QB5 உடன் இந்த தொலைபேசி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • லிஸ்டிங்கில் போன் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
  • போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!!  title=

ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இது ஜியோ போன் 5ஜி (Jio Phone 5G) என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தொலைபேசி ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும், அந்த நேரத்தில் நிறுவனத்தால் போனை வெளியிட முடியவில்லை. தற்போது கீக்பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டதால், இந்த போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தொலைபேசி இந்திய தரநிலைகள் பணியக (BIS) பட்டியலில் காணப்பட்டுள்ளது.

சர்டிஃபிகேஷன் இணையதளத்தில், மாடல் எண் LS1654QB5 உடன் இந்த தொலைபேசி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிஸ்டிங்கில் போன் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்த போன் தொடர்பான பல விஷயங்கள் வெளியாகி உள்ளன. போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ போன் 5ஜி: விவரக்குறிப்புகள்

Jio Phone 5G ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது 90HZ இன் புதுப்பிப்பு வீதத்தைப் பெறும். இது தவிர, ஃபோன் ஆண்ட்ராய்டு 12 தொடர்புடைய அமைப்பாக இருக்கலாம். இது பிரகதிஓஎஸ் என்ற பதிப்பைக் கொண்டிருக்கலாம் என ஆன்லைனில் விவரங்கள் கசிந்துள்ளன. எனினும், இவற்றை பற்றி உறுதியாக சொல்ல முடியாது.

ஜியோ போன் 5ஜி பேட்டரி

Jio Phone 5G-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh இன் வலுவான பேட்டரி உள்ளது. தொலைபேசியில் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் இருக்கக்கூடும். இதில் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பகத்தை சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Jio 5G: சீன நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ; ஏர்டெல் - VI கலக்கம்; மாஸ் பிளான் பின்னணி 

ஜியோ போன் 5ஜி கேமரா

ஜியோ போன் 5ஜியில் இரண்டு கேமராக்கள் பின்புறத்தில் இருக்கும். இதில் முதலாவது 13MP லென்ஸாகவும், இரண்டாவது 2MP லென்ஸாகவும் இருக்கும். முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஷூட்டர் இருக்கும். பல 5G பேண்டுகள் மற்றும் பல இணைப்பு அம்சங்கள் தொலைபேசியில் கிடைக்கும்.

பல வித தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சாதனங்களை மிக மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், ஜியோவின் ஜியோ போன் 5ஜி-க்காகவும் மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | விரைவில் வெளியாகும் ஜியோ 5ஜி போன்! கம்மி விலையில் இத்தனை சிறப்பம்சங்களா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News