நீங்கள் நவராத்திரியில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது, உண்மையில் சாம்சங் தனது சிறந்த ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.5000 குறைத்துள்ளது. இந்த போன் செப்டம்பர் 2021 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி இன் புதிய விலை
தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஐ இந்தியாவில் இரண்டு மெமரி வகைகளில் அறிமுகப்படுத்தியது. கைபேசியின் 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி பதிப்புகளின் விலை முறையே ரூ.,35,999 மற்றும் ரூ.,37,999 ஆகும்.
மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்
சாம்மொபைலின் கூற்றுப்படி, சாம்சங் தற்போது இந்த இரண்டு வகைகளின் விலையிலும் ரூ. 5,000 குறைத்துள்ளது. எனவே, அவை தற்போது ரூ.,30,999 மற்றும் ரூ.,32,499க்கு விற்கப்படும். புதிய விலைகள் அனைத்து சேனல்களிலும் பொருந்தும் மற்றும் நீங்கள் வங்கி தள்ளுபடிகளையும் பெறலாம். விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஏ53எஸ் 5ஜி ஐ விட கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மலிவானது.
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி-ஓ வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR