ஐபோனில் டைப்-C சார்ஜரை பயன்படுத்த முடியுமா?

உலகின் முதல் Type C waterproof ஐபோன் ஏலத்திற்கு வரவுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 09:07 PM IST
  • ஒருவர் ஏராளமானோரை கவரக்கூடிய waterproof ஐபோனை ஏலம் விடப்போவதாக கூறியுள்ளார்.
  • Gernot Jbstl என்பவரால் இந்த வகையான ஐபோன் உருவாக்கப்பட்டுள்ளது,
ஐபோனில் டைப்-C சார்ஜரை பயன்படுத்த முடியுமா?  title=

ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் ஐபோன்களில் பலவிதமான சிறப்பம்சங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பல பொறியாளர்களும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஐபோன்களில் புகுத்தி வருகின்றனர்.  தற்போது ஒருவர் ஏராளமானோரை கவரக்கூடிய waterproof ஐபோனை ஏலம் விடப்போவதாக கூறியுள்ளார்.  இதுவே உலகின் முதல் waterproof Type C ஐபோன் ஆகும். 

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

Gernot Jöbstl என்பவரால் இந்த வகையான ஐபோன் உருவாக்கப்பட்டுள்ளது, இவர் இதனை YouTube வீடியோவில் காண்பித்துள்ளார்.  Jöbstl  அந்த வீடியோவில்,  பொறியியல் மாணவர் Ken Pillonel என்பவரால் ஈர்க்கப்பட்டு நான் இந்த ஐபோனை உருவாக்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  மாணவர் Ken சமீபத்தில் தனது iPhone X இல் USB Type-C போர்ட்டை நிறுவ முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.  இதனை அடிப்படையாக வைத்து Jöbstl தனது iPhone X ல் waterproof திறனை சேர்த்திருக்கிறார். 

iphone

இதற்காக, அவர் தனது ஐபோனில் waterproof USB Type-C போர்ட்டைப் பயன்படுத்தி உள்ளார்.  மேலும் அதனுள் சில வகையான சூப்பர் பசை பயன்படுத்தப்படுகிறது.  Jöbstl தனது வீடியோவில், குழாயை திறந்து அதில் வழியும் நீரில் தொலைபேசியை நனைத்து அதன் waterproof தன்மையை காண்பித்தார். 

Type-C to C கேபிளைப் பயன்படுத்தி லேப்டாப்பில் மொபைலை இணைப்பதன் மூலம் USB Type-C போர்ட் செயல்படுகிறது என்பதை Jöbstl காண்பித்துள்ளார்.  இந்த மொபைல் ஜனவரி 19ம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது.   "உலகின் முதல் waterproof Usb-C ஐபோனை" ஜனவரி 19 அன்று மாலை 5 UTC அல்லது இரவு 10:30 IST ஏலம் விடப்போவதாகக் jobstl குறிப்பிட்டுள்ளார்.  Pillonel-ன் USB Type-C போர்ட் கொண்ட ஐபோன் சமீபத்தில் ரூ.64 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News