ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி, 2 ஆண்டுகளுக்கான இலவச சர்வீசிங்: அசத்தும் Ola Cars

இந்தியாவின் மிகப்பெரிய மொபிலிட்டி தளமான ஓலா, வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 05:37 PM IST
ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி, 2 ஆண்டுகளுக்கான இலவச சர்வீசிங்: அசத்தும் Ola Cars title=

கார் என்பது மக்களுக்கு இந்நாட்களில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. சொந்தமாக கார் இருந்தால், அதனுடன் பல வசதிகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மொபிலிட்டி தளமான ஓலா, வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. ஓலா நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய 'ப்ரீ ஓண்ட் கார் திருவிழாவை' அறிவித்தது.

இந்த கார் திருவிழாவில் கார் வாங்கினால் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தள்ளுபடியுடன், 2 ஆண்டுகளுக்கு உங்கள் காருக்கான இலவச சர்வீசிங், 12 மாத வாரண்டி மற்றும் 7 நாட்களுக்கான ரிட்டர்ன் பாலிசி போன்ற பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஒன் ஸ்டாப் ஷாப்

ஓலா கார்ஸ் (Ola Cars) சிஇஓ அருண் சர்தேஷ்முக் கூறுகையில், “இந்த தீபாவளிக்கு ஓலா கார்ஸ் பல சிறந்த மற்றும் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. புதிய வாகனம் வாங்கும் அனுபவத்தை விட சிறந்த அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம். இதற்காக அவர்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த வசதிகள் அனைத்தும் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. இதன் கீழ், ஓலா கார்கள் தளத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.” என்றார்.

ALSO READ: Ola Cars: குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க ஓலாவின் புதிய தளம் அறிமுகம் 

நீங்கள் விரும்பும் காரை எப்படி வாங்குவது

ஓலா செயலி மூலம் புதிய மற்றும் பயன்படுத்திய வாகனங்களை வாங்கலாம். வாகனம் வாங்குவதில் இருந்து, நிதியுதவி, பதிவு, காப்பீடு, பராமரிப்பு மற்றும் கார் சேவை போன்ற சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. இது மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் விரும்பினால், தங்கள் வாகனத்தை மீண்டும் ஓலா கார்களுக்கு மறுவிற்பனை செய்யலாம். அதாவது, இனி வாடிக்கையாளர்களுக்கு கார் வாங்கவோ விற்கவோ டென்ஷன் இல்லை. எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் தங்கள் கார்களை வாங்க, விற்க மற்றும் பராமரிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு ஒன் ஸ்டாப் ஷாப்பாக இருக்கும்.

1 லட்சம் பம்பர் தள்ளுபடி

இந்த மாதத்தில் ஓலா கார்கள் (Cars) 5,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஓலா விற்பனை செய்யும் கார்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு உள்ளது. ஓலா கார்ஸ் நிறுவனம் 300 மையங்களுடன் 100 நகரங்களில் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த கார் திருவிழாவில் கார் வாங்கினால் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனுடன், 2 ஆண்டுகளுக்கு உங்கள் காரின் இலவச சேவை, 12 மாத வாரண்டி, 7 நாட்களுக்கான ரிட்டர்ன் பாலிசி போன்ற பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ப்ரீ-ஓண்ட் கார் என்றால் என்ன?

பழைய கார்கள் அதாவது செகண்ட் ஹேண்ட் கார்கள் (Second Hand Cars) 'ப்ரீ ஓன்ட் கார்' கார்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, முன்பு ஒருமுறை வாங்கப்பட்ட கார்கள் இப்போது மீண்டும் விற்கப்படுகின்றன. நாட்டில் ப்ரீ-ஓண்ட் கார்களுக்கான சந்தை சில காலமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களுக்கு நல்ல தரமுள்ள கார்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன.

ALSO READ: Maruti Suzuki Celerio இன்று இந்திய சாலைகளில் களமிறங்கும்: விலை, பிற விவரங்கள் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News