கார் வாங்கும் முன் இந்த Tricks-ஐ பயன்படுத்துங்கள்: உங்களுக்கான காரை மலிவாக வாங்கலாம்

Auto Tips: கார் வாங்கும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2022, 02:51 PM IST
  • கார் வாங்கும் திட்டம் உள்ளதா?
  • இந்த சிறப்பு விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
  • சிறந்த மற்றும் மலிவான கார் கிடைக்கும்.
கார் வாங்கும் முன் இந்த Tricks-ஐ பயன்படுத்துங்கள்: உங்களுக்கான காரை மலிவாக வாங்கலாம்  title=

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனேயே கார் வாங்க நம்மில் பெரும்பாலானோர் கிளம்பி விடுகிறோம். எனினும், கார் வாங்குவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. 

ஷோரூமைப் பார்த்து மட்டும் கார் வாங்கக் கூடாது. இதற்கு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். கார் வாங்கும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

மைலேஜைக் கண்காணிக்கவும்

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு காரை வாங்கும்போது, ​​​​அதன் மைலேஜில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காரின் மைலேஜ் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவு குறைவாக நமக்கு எரிபொருள் தேவைப்படும். இதன் காரணமாக இதற்கு ஆகும் செலவு குறையும். 

மற்ற கார்களுடன் ஒப்பிடுங்கள்

கார் வாங்குவதற்கு முன், நீங்கள் வாங்க விரும்பும் காரை மற்ற கார்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியமாகும். காருக்கான உங்கள் பட்ஜெட்டில் இருந்து அம்சங்கள், மைலேஜ், உட்புறம் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படி செய்தால், கார் வாங்கும் நமது தேர்வை நாம் மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | ரூ.500-க்கு மாருதி சுசூகி அறிவித்துள்ள ஆஃபர் - மார்ச் 31 கடைசி தேதி 

உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

பணவீக்கம் அதிகமாக இருக்கும் இன்றைய நிலையில், கார் வாங்குவதற்கு முன், உங்களுக்கான பட்ஜெட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகும். நீங்கள் கார் வாங்க வைத்திருக்கும் பட்ஜெட்டை கவனிக்கவில்லை என்றால், கார் வாங்கப்போய், வீட்டின் பட்ஜெட் கெட்டுப் போவதுடன், வீட்டு செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். ஆகையால், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், அதற்கேற்றபடி ஒரு காரை வாங்குங்கள், அதிக விலை கொண்ட கார் வாங்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த பட்ஜெட்டிலும் பல சிறந்த கார்கள் கிடைக்கின்றன. 

பராமரிப்பு செலவு

கார் வாங்கிய பிறகு வரும் மிகப்பெரிய பிரச்சனை காரின் பராமரிப்பு செலவாகும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு காரை வாங்குவதற்கு முன், அதன் பராமரிப்பு செலவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால், பிற்காலத்தில் எந்த வித பிரச்சனையும் சந்திக்க வேண்டி இல்லாமல் இருக்கும். 

இருக்கை திறன்

கார் வாங்கும் போது, ​​குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ள வேண்டும். அதிக நபர்கள் இருந்தால், நீங்கள் அதிக இருக்கை திறன் கொண்ட காரை வாங்கலாம். இதனால் அனைவரும் வசதியாக பயணம் செய்யலாம். நீங்கள் ஒரு குடும்பத்திற்காக அல்லது உங்களுக்காக ஒரு கார் வாங்கினால், 5 இருக்கைகள் கொண்ட கார் போதுமானது.

மேலும் படிக்க | GPay, PhonePe-வை காலி செய்ய திட்டம்போடும் TATA - விரைவில் புதிய UPI செயலி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News