BSNL வழங்கும் ரூ.499 பிளான்... தினம் 2GB டேட்டா உடன் கூடுதலாக 3GB டேட்டா...

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 17, 2024, 05:07 PM IST
  • மலிவான கட்டணத்தில் தினம் 2ஜிபி டேட்டா
  • பிஎஸ்என்எல் ரூ 499 ரீசார்ஜ் திட்டம்
  • 2025 ஜூலைக்கு முன்னர் 1 லட்சம் 4G டவர்கள் நிறுவ திட்டம்
BSNL வழங்கும் ரூ.499 பிளான்... தினம் 2GB டேட்டா உடன் கூடுதலாக 3GB டேட்டா... title=

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். 

அதிக நன்மைகளை கொடுக்கும் BSNL திட்டங்கள்

BSNL நிறுவனமும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல  மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. பிஎஸ்என்எல் திட்டங்கள் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை என்பதால் வரவேற்பு அதிகமாக உள்ளது.

மலிவான கட்டணத்தில் தினம் 2ஜிபி டேட்டா 

தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் வகையில் அரசுத் துறை நிறுவனமான சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது 75 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 499 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.499 Plan)

இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.499 மற்றும் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கிடைக்கும், மேலும் வரம்பிற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளைச் செய்யலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 3ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.

BSNL 5G சோதனை

இந்தியா உள்நாட்டு கருவிகளையும் சாதனங்களை பயன்படுத்தி தனது  4G நெட்வொர்க்கை கட்டமைக்க உறூதி பூண்டுள்ளது. மேலும் BSNL 5G சோதனையிலும் ஈடுபட்டுள்ளது. TCS, C-DoT மற்றும் Tejas Networks ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, BSNL தனது 4G நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. அதே சமயத்தில்,  ஜியோ அதன் 5G தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனினும், அதன் 4G உள்கட்டமைப்பிற்காக வெளி விற்பனையாளர்களையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஜூலைக்கு முன்னர் 1 லட்சம் டவர்கள் நிறுவ திட்டம்

தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல் 2025 ஆம் ஆண்டின் ஜூலைக்கு முன்னர் 1 லட்சம் டவர்கள் நிறுவப்பட உள்ளதாகவும், அதில் 25 ஆயிரம் டவர்கள் கிராமப்புறங்களில் நிறுவப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். BSNL 2024  தீபாவளிக்குள் 75 ஆயிரம் 4G டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு வைத்திருந்தாலும், இதுவரை 25,000 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News