BSNL அசத்தல் ஆபர்; 75GB டேட்டா, திணறிப்போன பிற நிறுவனங்கள்

BSNL Rs 2022 recharge plan: 300 நாட்கள் வேலிடிட்டி, 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றுடன் தொடங்கப்பட்ட பிஎஸ்என்எல் திட்டம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 12, 2022, 09:33 AM IST
  • BSNL ரூ. 2,022 இன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
  • BSNL இன் ரூ.2022 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது.
  • பிஎஸ்என்எல்லின் ரூ.2022 திட்டத்தில் மொத்தம் 75ஜிபி டேட்டா மாதாந்திர அடிப்படையில் கிடைக்கிறது.
BSNL அசத்தல் ஆபர்; 75GB டேட்டா, திணறிப்போன பிற நிறுவனங்கள் title=

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) ரூ. 2,022 இன் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மாதாந்திர அடிப்படையில் 300 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 75 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் பிற நன்மைகளுடன் வழங்குகிறது. பிஎஸ்என்எல்லின் புதிய ப்ரீபெய்ட் திட்டம், அரசு தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் அனைத்து ப்ரீபெய்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது. டேட்டா மற்றும் காலிங் வசதிகளுடன் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.  எனவே இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டம் 2022' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் திங்களன்று தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.2,022 ஆகும். அதன்படி பிஎஸ்என்எல்லின் ரூ.2022 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மறுபுறம் டேட்டாவைப் பற்றி பேசுகையில், அதிவேக டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இதன் இன்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் குறைகிறது, ஆனால் டேட்டா உபயோகம் அப்படியே இருக்கும். அதாவது முதல் 60 நாட்களுக்கு அதிவேக டேட்டாவைப் பயன்படுத்த முடியும், அதன் பிறகு பயனர்கள் டேட்டா வவுச்சரைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 300 நாட்கள் ஆகும்.

மேலும் படிக்க | Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் இந்த புதிய திட்டம் (ரூ.2022 திட்டம்) ஆகஸ்ட் 31 வரை மட்டுமே கிடைக்கும். 

மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட ரூ.2,399 மற்றும் ரூ.2,999க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி பேசுகையில், தற்போதுள்ள ரூ.2022 திட்டத்தின் செல்லுபடியுடன் சமமாக வழங்குகிறது,  அதன்படி இதில் 75ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்: அடுத்த 18 முதல் 24 மாதங்களில் இந்தியாவில் 4ஜி சேவையை தொடங்க தொலைத்தொடர்பு ஆபரேட்டர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவையும் தயாராகிவிட்டதாகவும், இறுதிச் சோதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; ₹699 விலையில் Nokia Smart TV!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News